அ.முத்துலிங்கம் நேர்காணல்
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் நேர்காணல் யாவரும்.காமில் வெளியாகியுள்ளது. அகரமுதல்வன் நேர்காணல் செய்திருக்கிறார். சமீபத்தில் படித்த மிகச்சிறந்த நேர்காணலிது. முத்துலிங்கத்தின் பதில்கள் வியக்கவைக்கின்றன. அ.முத்துலிங்கம் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் இருக்கைக்காகச் செய்து வரும் முன்னெடுப்புகள் மகத்தானவை. இயல் விருதுகள் வழங்குவதிலும், தமிழ் படைப்பாளிகளைக் கொண்டாடுவதிலும் அவர் காட்டும் அக்கறையும் நேசமும் நிகரற்றது. கிரிக்கெட் விளையாட்டில் ஒரு சில வீரர்கள் தனக்குப் பந்து வரும்வரை காத்திருக்க மாட்டார்கள். ஒரு அடி முன்னால் போய்ப் பந்து வரும்போதே எதிர்கொண்டு ஓங்கி அடித்துவிடுவார்கள். …