குறுங்கதை 58 காதல்பறவைகள்.
அன்புமிக்கச் சுனிதா அகர்வால் அவர்களுக்கு, நீங்கள் எனது திருமணப்பரிசாகக் கொடுத்தனுப்பிய இரண்டு காதல் பறவைகளை உங்களிடமே திருப்பி அனுப்பி வைக்கிறேன். இது முறையான செயலில்லை என்ற போதும் இந்தப் பறவைகள் வந்த நாள் முதல் நான் நிம்மதியற்றுப் போய்விட்டேன் என்பதால் இதை நீங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மன்றாடுகிறேன். எனக்கோ, என் மனைவிக்கோ பறவைகள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்ததே கிடையாது. ஒருமுறை அழகான நாய்க்குட்டி ஒன்றை வீட்டிற்குக் கொண்டுவந்த போது உடனே அதை …