கோடுகளின் உயிரியக்கம்
அ.பெருமாள் சாந்தி நிகேதனில் பயின்ற ஓவியர். மதுரையில் வசித்து வந்த அவர் ஓவியக்கலை குறித்த சிறந்த புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவரது மொழியாக்கத்தில் வெளியாகியுள்ள புத்தகம் ஓவியக்கலை- நந்தலால் போஸ். பெருமாள் 1930லிருந்து 1938வரை சாந்திநிகேதனில் ஓவியம், சிற்பம் ஆகியவற்றை பயின்றார். பின்பு அதே சாந்திநிகேதனில் ஆசிரியராகவும், நூலகராகவும், அருங்காட்சியப் பொறுப்பாளராகவும் பணியாற்றினார். தனது ஆசிரியரும் இந்தியாவின் பெருமைக்குரிய ஓவியருமான நந்தலால் போஸ் ஆற்றிய உரை மற்றும் அவரது கட்டுரைகளை பெருமாள் மொழியாக்கம் செய்திருக்கிறார் நந்தலால் போஸ் நவீன …