சித்தேஸ்வரி
ஒரு சிறந்த திரைப்படத்திற்குத் தேவை தேர்ந்த காட்சிபடிமங்கள், சிறந்த இசை, யதார்த்தமான நடிப்பு, மிக்குறைந்த அளவான உரையாடல் என மணிகௌல் (Mani Kaul) ஒரு நேர்காணலில் கூறுகிறார், இவரது திரைப்படங்கள் இதற்கான எடுத்துக்காட்டுகள் போலவே இருக்கின்றன அமெரிக்கப் பல்கலைகழகத்தில் சினிமாப் பேராசிரியராக பணியாற்றும் எனது நண்பர் சொர்ணவேல் மணிகௌலின் தீவிர ரசிகர், அவருடன் அமெரிக்காவில் தங்கியிருந்த போது இரவெல்லாம் மணிகௌல் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம், அவரிடமிருந்து சித்தேஸ்வரி (Siddheshwari) டாகுமெண்டரியின் டிஜிட்டல் பிரதி ஒன்றைப் பெற்றுவந்தேன், அப்படத்தை பத்துக்கும் …