admin

கலந்துரையாடல்

திருப்பூர் வலைப்பதிவர் குழும நண்பர்கள் ஏற்பாடு செய்திருக்கும், ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருப்பூர் செல்கிறேன். சந்திப்பு 25 செப்டம்பர் ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. வாசகர்களும், நண்பர்களும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கலாம்.  மேலும், இடம் மற்றும் இதர விபரங்களுக்கு கீழே குறிப்பிட்டிருக்கும் நண்பர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். வெயிலான் – 94422 35602 முரளி – 98433 41223 **

மறுக்கப்படும் பிரார்த்தனைகள்

அமெரிக்காவில் வாழும் சீனர்களைப்பற்றி நிறைய நல்ல திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன, ஒருவகையில் அமெரிக்க சினிமாவின் தனி வகைமையாகவே இந்தத் திரைப்படங்கள் அங்கீகரிக்கப்பட்டுவிட்டன, சமீபத்தில் வயானே வாங் Wayne Wang இயக்கிய A Thousand Years of Good Prayers என்ற திரைப்படத்தைப் பார்த்தேன், கலங்க வைக்கும் உணர்ச்சிப்பூர்வமான திரைப்படமிது, படம் மெதுவாகவே துவங்குகிறது, காட்சிபடுத்தும் முறையும் கதாபாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாடும் ஜப்பானிய திரைமேதை யசுஜிரோ ஒசுவின் திரைப்படம் ஒன்றைக் காண்பதைப் போல உணரச்செய்தது, அதனாலே அந்தப் படம் மீது …

மறுக்கப்படும் பிரார்த்தனைகள் Read More »

நான்கு குறும்படங்கள்

 சமீபத்தில் நான் பார்த்த நான்கு குறும்படங்கள்  The Accordion by Jafar Panahi https://youtu.be/J0qDkHB6XCI A Boy, A Wall and A Donkey by Hany Abu-Assad https://youtu.be/TrAzY1pZ_XY What about me? by Etgar Keret & Shira Geffen https://youtu.be/baUG5er7s7A Dangerous Games by Marina Abramovic https://youtu.be/VxsPq3yviRU  இணையதளங்கள  சமகாலக் கவிதைகள் சிறுகதைகளை வாசிக்க உதவும் சிறந்த இணைய இதழ் https://asymptotejournal.com/listing.php?cat=Poetry&issue=10 நவீன கவிதைகளை வாசிக்க உதவும் கவிதைக்கான பிரத்யேக தளங்கள் …

நான்கு குறும்படங்கள் Read More »

அறிவிப்பு

2011ம் ஆண்டிற்கான நல்லி திசைஎட்டும் மொழியாக்க இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சி வருகின்ற 17ம் தேதி சனிக்கிழமை மாலை திருச்சி மெயின்கார்ட்கேட் அருகிலுள்ள ரசிக ரஞ்சனி சபாவில் நடைபெற இருக்கிறது, அந்த விழாவில் நான் ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்துள்ள கால்முளைத்த கதைகள் நூலிற்காக விருது பெற இருக்கிறேன் அன்று காலை பத்து மணி அளவில் மொழியாக்கப் படைப்பாளிகளின் சந்திப்பு மற்றும் சிறப்புரை நிகழ்ச்சிகள் ரசிக ரஞ்சனி சபாவில் நடைபெற உள்ளது வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி …

அறிவிப்பு Read More »

கதைக்கம்பளம் விமர்சனம்

குழந்தைகளுக்காக நான் எழுதியுள்ள ஏழு புத்தகங்கள் குறித்த விமர்சனம்,  எஸ்.வி,வேணுகோபாலன் கதைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக எழுதியிருக்கிறார், அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி. ** கதைகளின் உலகிற்குக் குழந்தைகளை மீட்டெடுக்கும் அற்புதக் கற்பனைக் கொத்துக்கள்… எஸ் வி வேணுகோபாலன் ஏய், சிப்பு, குப்பு, பப்பு, திப்பு, கப்பு,லப்பு, மப்பு. ….எல்லாம் இங்க பக்கத்திலே வந்து உக்காருங்க. முதல்ல எல்லாரும் கண்களை மூடிக்கணும். நான் சொல்ற வரைக்கும் திறக்கக் கூடாது. சுவாரசியமா சில விஷயங்களைக் காட்டப் …

கதைக்கம்பளம் விமர்சனம் Read More »

துயில் விம‌ர்ச‌ன‌ம்

– டி.சே. த‌மிழ‌ன் 1. நாம் எத்த‌னையோ இட‌ங்க‌ளுக்கு நம் வாழ்வில் ப‌ய‌ணித்திருப்போம். அவ்வ‌வ்விட‌ங்களின் இய‌ற்கையின‌தோ, க‌ட்டிட‌க்க‌லையின‌தோ அழ‌கைக் க‌ண்டு ம‌ன‌ஞ்சிலிர்த்து இர‌சித்துமிருப்போம். ஆனால் எப்போதாவ‌து நாம் நின்று இர‌சிக்கும் இட‌த்தின் நில‌விய‌லும் வாழ்விய‌லும் எவ்வாறு சில‌ தசாப்த‌ங்க‌ளுக்கோ, நூற்றாண்டுக‌ளுக்கு முன்னே இருந்திருக்கும் என்று யோசித்த‌துண்டா?  அவ்வாறு பிர‌பல்ய‌ம் வாய்ந்த‌ ஒரு தேவால‌ய‌த்தின் வ‌ர‌லாற்றையும், அத‌னோடு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளையும் விரிவாக‌ப் பேசுகின்ற‌ ஒரு நாவ‌ல்தான் எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் ‘துயில்’. இத்தேவால‌ய‌ம் பிற்கால‌த்தில் (அல்ல‌து நிக‌ழ்கால‌த்தில்) நோய்மையுற்ற‌வ‌ர்க‌ளுக்கு ந‌ம்பிக்கை த‌ரும் …

துயில் விம‌ர்ச‌ன‌ம் Read More »

என் பள்ளி

பள்ளி வாழ்க்கை என்பது ஒரு மகிழ்ச்சியான கனவு, அதற்குள் முடிந்துவிட்டதே என்ற ஏக்கத்தைத்  தந்தபடியே இருப்பதே அதன் தனித்துவம், கையால் தலையைச் சுற்றி காதைத் தொட்டுவிட முடிகிறது என்ற ஒரு தகுதி தான் என்னைப் பள்ளியில் சேர்க்க உதவியது, அது தான் அன்றைய காலத்தின் நுழைவுத்தேர்வும் கூட, பொதுவாக சரஸ்வதி பூஜை காலத்தில் தான் புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும், ஆறு வயதில் அப்படி ஒரு சரஸ்வதி பூஜைக்குப் பிறகு கடையில் ஆரஞ்சு மிட்டாய்கள் வாங்கிக் கொண்டு …

என் பள்ளி Read More »

சமண நடை

மதுரையில் எனது புத்தக வெளியீட்டுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது, புத்தகக் கண்காட்சியில் நிறைய புதிய வாசகர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தது சந்தோஷம் தருவதாகயிருந்தது, சனிக்கிழமை மாலை புத்தகக் கண்காட்சி அரங்கில் தேவதச்சனின் புதிய கவிதை நூலான இரண்டு சூரியன் வெளியானது, அது குறித்து நான் பதினைந்து நிமிசங்கள் பேசினேன், நவீன கவிதையின் இன்றைய சவால்களும் சாதனைகளையும் பற்றி காலையில் கவிஞர்கள் தேவதச்சன், கலாப்ரியா. சமயவேல். மூவருடனும் நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது உற்சாகமளிப்பதாகயிருந்தது. எழுத்தாளர் முத்துகிருஷ்ணனும் அவரது நண்பர்களும் ஒன்றிணைந்து …

சமண நடை Read More »

மதுரை பயணம்

நாளை முதல் செப்டம்பர் 5 வரை மதுரையில் இருப்பேன், மாலை 4 மணி முதல் புத்தகக் கண்காட்சியில் உள்ள உயிர்மை அரங்கில் என்னைச் சந்திக்கலாம் மதுரையில் நடைபெற உள்ள எனது புதிய புத்தக வெளியீட்டு விழாவில் நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படியாக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் எனது புத்தகங்கள் யாவும் உயிர்மை அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கின்றன, யாமம் நாவல் புதிய சிறப்புப் பதிப்பாக வெளியாகி உள்ளது. உப பாண்டவம் நாவலின் புதிய பதிப்பு அழகான வடிவமைப்புடன் …

மதுரை பயணம் Read More »

உயிர்மை அழைக்கிறது

மதுரையில் உயிர்மையின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா நாள் 3.9.2011 சனிக்கிழமை நேரம் மாலை 4  மணி இடம்: புத்தக கண்காட்சி மைதானம் தமுக்கம் மைதானம் மதுரை வெளியிடப்படும் நூல்கள் 1) இரண்டு சூரியன் தேவதச்சன் 2) சேகுவேரா வந்திருந்தார் வா.மு.கோமு 3) திரைப்படக் கலை முனைவர். வெ.மு.ஷாஜகான் கனி 4) ஈழத்து நாட்டார் பாடல்கள் தொகுப்பு: ஈழவாணி வரவேற்புரை: மனுஷ்ய புத்திரன் சிறப்புரைகள்: 1) மு.ராமசாமி 2) எஸ்.ராமகிருஷ்ணன் 3) சுகுமாரன் 4) ந. முருகேச …

உயிர்மை அழைக்கிறது Read More »