admin

முரகாமியின் நிழல்

‘ ட்ரீமிங் முரகாமி’ ஆவணப்படம் ஜப்பானிய எழுத்தாளரான முரகாமியின் டேனிஷ் மொழிபெயர்ப்பாளர் மெட்டே ஹோமின் பணியை ஆவணப்படுத்தியுள்ளது. முரகாமியின் வாசகராக அறிமுகமாகி அவரது எழுத்துகளை மட்டுமே மொழியாக்கம் செய்யும் மெட்டே ஹோம் தனது மொழியாக்கப் பணிக்காக ஜப்பானின் உயரிய விருதைப் பெற்றிருக்கிறார். இந்த ஆவணப்படம் ஹோம் எப்படி மொழியாக்கம் செய்கிறார். அதில் அவர் சந்திக்கும் சவால்கள் எவை என்பதைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது. சுயமாக ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்ட மெட்டே ஹோம் சில ஆண்டுகள் ஜப்பானில் …

முரகாமியின் நிழல் Read More »

கதைப்பயணி / 3

தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பில் தயாரிக்கப்படும் கதைப்பயணியின் மூன்றாவது பகுதி வெளியாகியுள்ளது. இந்த காணொளிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி

ரெம்ப்ராண்டின் மன்னர்

ஓவியர் ரெம்ப்ராண்டினைப் பற்றிய கறுப்பு வெள்ளைத் திரைப்படத்தில் அவரது ஓவிய உலகை விடவும் வறுமையான வாழ்க்கையே அதிகம் சித்தரிக்கபட்டுள்ளது. இன்று ரெம்ப்ராண்டின் ஓவியங்கள் பலநூறு கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆம்ஸ்டர்டாமில் அவர் வாழ்ந்த போது கடனைக் கட்ட முடியாமல் திவாலாகியிருக்கிறார். ஓவியம் வரைவதற்கான வண்ணங்கள் வாங்குவதற்குக் கூட வருவாய் இல்லாதவராக வாழ்ந்திருக்கிறார். ரெம்ப்ராண்டின் சுய உருவப்படங்களைக் காணும் போது அவரது ஆளுமையின் தனித்துவம் நன்றாக புலப்படுகிறது. குறிப்பாக …

ரெம்ப்ராண்டின் மன்னர் Read More »

அருவியால் முடியாதது

புதிய சிறுகதை. ஜுலை 1 2026 சேர்மக்கனி தனது வீட்டிலிருந்த நாய்களின் மீது பொறாமை கொண்டிருந்தான். அவற்றைப் பராமரிப்பதற்காகத் தனது சம்பளத்தை விடவும் முதலாளி அதிகம் செலவு செய்கிறாரே என்ற பொறாமையும், நாய்களுக்குக் கிடைப்பது போல அன்றாடம் கறிச்சோறு தனக்குக் கிடைப்பதில்லையே என்ற கோபமும் அவனுக்கிருந்தது. அந்தப் பங்களா குற்றாலத்திலிருந்தது. நேஷனல் மில் முதலாளியான காசிநாதன் கட்டிய பங்களா . ஆறாயிரம் சதுர அடி கொண்ட வீடு. சீசன் துவங்கியதும் காசிநாதன்  குடும்பத்தினர் ஒரு மாத காலம் …

அருவியால் முடியாதது Read More »

எழுத்தெனும் திசைகாட்டி

காஃப்கா எழுதாத கடிதம் – எஸ்.ராமகிருஷ்ணன் வாசிப்பனுபவம் . கடையாணியார் சீ.நே.பி அப்பாவிற்கும் மகனுக்குமான புரிந்து கொள்ள முடியாத மன வேறுபாடுகள் எல்லாக் காலங்களிலும் இருந்து கொண்டே இருக்கின்றன. அதுவும் ஒரு எழுத்தாளன் தன்னைப் பற்றிதானே எழுப்பிக் கொள்ளும் பிம்பமும், அந்தப் பிம்பத்திற்கு எவ்வித ஒற்றுமையும் இல்லாமல் கட்டமைக்கப்பட்ட பிம்பம் அவன் தந்தையின் மனதில் இருப்பதையும், அதை உடைக்க அவன் படும் பாட்டினையும் மன உளவியலாகவே இதில் விளக்கியுள்ளார். ( காஃப்கா தன் அப்பாவிற்காக எழுதி ஆனால் …

எழுத்தெனும் திசைகாட்டி Read More »

நாற்காலியான பெண்

 “பை டிசைன்” திரைப்படத்தில் மூன்று பெண்கள் சலிப்பான ஒரு மதியத்தில், நேரத்தைக் கடத்துவதற்காக மரச்சாமான்கள் விற்கும் கடையைப் பார்வையிடுகிறார்கள். அந்தக் கடையில் கமிலிக்கு ஒரு நாற்காலி பிடித்துப் போகிறது. ஆனால் விலை அதிகம் என்பதால் அதை உடனே வாங்க முடியவில்லை. எப்படியாவது வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். தனது சேமிப்பில் உள்ள பணத்தை எடுத்துக் கொண்டு மறுநாள் வாங்க முற்படுவதற்குள் நாற்காலி வேறு ஒருவருக்கு விற்கபட்டு விடுகிறது. அதனைக் கமிலியால் ஏற்க முடியவில்லை. விற்பனை செய்யப்பட்ட அந்த …

நாற்காலியான பெண் Read More »

காலையின் சுழிப்பு.

புதிய சிறுகதை. ஜுன் 23. 2026 ஏழாவது செக்டார் முழுவதும் மரங்கள் நிரம்பியிருந்தன. அதுவும் கல்பனா ஸ்டோரை ஒட்டி வடக்காகத் திரும்பும் வீதியில் இரண்டு பக்கமும் மஞ்சள் கொன்றையும் வேம்பும் வாகையும் இருந்தன. பெரும்பாலும் தனிவீடுகள். விடிகாலை வெளிச்சத்தில் அந்த வீதியைப் பார்க்க வரையப்பட்ட சித்திரம் போலத் தோற்றமளிக்கும். அதற்காகவே நந்தகுமார் சூரிய உதயமானவுடன் நடக்க ஆரம்பிப்பார். அரசு எழுதுபொருள் விற்பனைக் கிடங்கில் பணியாற்றும் அவர் சமீபத்திலே அந்தப் பகுதிக்குக் குடிவந்திருந்தார். அவருக்குக் கடுமையான மூட்டுவலி மற்றும் …

காலையின் சுழிப்பு. Read More »