அனுபவம்

அறிந்த அவசரம்

நம் நூற்றாண்டின் தீர்க்கமுடியாத நோய்களில் ஒன்று அவசரம். வீடு, பணியிடம் பேருந்து, மின்சாரரயில், வணிகவளாகம் பள்ளி, கோவில், வங்கி, மருத்துவமனை, தியேட்டர் என எங்கும் அவசரம் பொங்கி வழிகிறது. சிறியவர்கள் பெரியவர்கள் என்று பேதமில்லாமல் இந்த நோய்க்கு நம்மை ஒப்புக் கொடுத்திருக்கிறோம். எதற்காக இவ்வளவு அவசரம் என்று ஒரு போதும் நம்மை நாமே கேட்டுக் கொண்டதில்லை. அவசரம் வைரஸ் கிருமிகளை  விடவும் மோசமானது. அது உடலுக்குள் புகுந்த மறுநிமிசம் கைகால்கள் தானே உதற துவங்கிவிடுகின்றன. முகம் சிவந்துவிடுகிறது. …

அறிந்த அவசரம் Read More »

சிறுநுரை.

பால்ய வயதின் நினைவுகள் அவ்வப்போது உதிரியாகத் தோன்றுவதும் அதைச் சிறிய குறிப்பாக எழுதி வைத்துக் கொள்வதும் சில வருடங்களாகவே நடந்து வருகின்றது. இது போன்ற பால்யத்தின் சிறுகுறிப்புகளை மட்டும் தனித்து ஒரு நூலாக வெளியிடலாம் என்ற எண்ணம் உள்ளது. இவை கதைகள் போலவும் இருக்கின்றன. கதைகளை விட நெருக்கமாகவும் இருக்கின்றன. அதிலிருந்து சில மாதிரிகள். வட்டக்கண்ணாடி. அப்போது நாங்கள் சூலக்கரை என்ற சிறிய கிராமத்திலிருந்தோம். பத்து வயதிருக்கும் போது கையில் வைத்து பார்ப்பது போன்ற வட்டகண்ணாடி ஒன்றை …

சிறுநுரை. Read More »

பொதுக்குளியல்.

சென்ற வாரத்தில் ஒரு நாள் எனக்கு விசித்திரமான பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. சென்னையில் நடைபெற உள்ள மாற்று மருத்துவக்கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சாத்தூரிலிருந்து நாற்பது பேர் ஒரு வேனில் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காலையில் குளிப்பதற்கு மட்டும் ஏதாவது ஒரு இடமிருக்கிறதா அல்லது வழியில் எங்காவது குளிக்கலாம் என்றால் எங்கே குளிப்பது என்று எனது அண்ணன் தொலைபேசியில் கேட்டார். இதற்கென எளிய விஷயம் தானே என்று முதலில் தோன்றியதால் விசாரித்து ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னேன். …

பொதுக்குளியல். Read More »

உதறிச் செல்லும் அடையாளம்

தீவிர சினிமாவின் இன்றைய இலக்கு வாழ்வைக் காண் நிலையில் அப்படியே பிரதி பலிப்பது மட்டுமல்ல. மாறாக வாழ்வின் முக்கியப் பிரச்சனை யாகக்  கருதும் ஒன்றை நுணுகி ஆராய்வதும், அதன் அக மற்றும்புறத்தளங்களில் ஏற்படும் சலனங்களைஅவதானித்து வெளிப்படுத்துவதுமேயாகும் . சமகால உலக சினிமாவில் பெரும்பான்மை குடும்பம் என்ற அமைப்பு சார்ந்த பிரச்சனைகளையே மையப் பொருளாக  கொண்டுள்ளது. குறிப்பாக குடும்பத்தை  உருவாக்குவதிலும் கட்டிக் காப்பதிலும் ஆண் பெண் இருவரும் என்ன பங்கு வகிக்கிறார்கள். ஆண் பெண் இருவருக்குமான பால் இச்சைகளின் …

உதறிச் செல்லும் அடையாளம் Read More »

ஆட்ரி ஹெபர்னைக் காதலிப்பவர்கள்.

            அறுபது வயதைக்கடந்த பலரது நினைவிலும் இன்றும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை ஆட்ரி ஹெபர்ன் (Audrey Hepburn)  தீராக்காதலியாகவே இருக்கிறாள். ஹாலிவுட் திரைப் படங்களை பற்றி வயதானவர்களுடன் பேசத் துவங்கியதுமே அவர்கள் முகத்தில் ஆட்ரி ஹெபர்ன் மீதான காதல் ஒளிவீசுவதை பலரிடமும் காண முடிந்திருக்கிறது. உலகமெங்கும் வயதானவர்கள் இந்த ஒரு விஷயத்தில் மாறாமலே யிருக்கிறார்கள் என்பது வியப்பாகவே இருக்கிறது. சமீபத்தில் எனது நண்பரின் அப்பாவோடு பேசிக் கொண்டிருந்த போது அவர் ஆட்ரி …

ஆட்ரி ஹெபர்னைக் காதலிப்பவர்கள். Read More »

விரும்பி கேட்டவை

வார்த்தை என்ற புதிய இலக்கிய இதழ் வெளியாகி உள்ளது. அதன் வெளியிட்டினை தொடர்ந்து மறுநாள் நண்பர்கள் சந்திப்பு மற்றும் சிறிய விருந்து ஒன்றிற்கு நண்பர் பிகே.சிவகுமார் ஏற்பாடு செய்திருந்தார். அதில் கலந்து கொள்ள நண்பரின் அலுவலகத்திலிருந்து கிளம்பினேன்.வழியில் ஒரு சிறிய தொலைபேசி உரையாடல் காரணமாக வழி சொல்ல மறந்து போய்  வானகஒட்டுனர் என்னை பெருங்குடி பக்கமாக கூட்டிக் கொண்டு போய்விட்டார். எப்படி இவ்வளவு சரியாக வழிமாறி இவ்வளவு தூரம் வந்தோம் யோசிக்கும் போது ஆச்சரியமாக இருந்தது. அந்த …

விரும்பி கேட்டவை Read More »

எறும்பின் கால்கள்

எறும்புகள் எப்போது துங்கும் என்றொரு நாள் என் பையன் என்னிடம் கேட்டான். என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இரவானதும் அது துங்கிவிடும் என்று பொய்யாக ஒரு சமாதானம் சொன்னேன். உடனே அவன், இல்லை, ராத்திரியிலும் சமையலறையில் எறும்புகள் போவதைப் பார்த்திருக்கிறேன் என்று சொன்னான்.வேறு வழியில்லாமல் எறும்புகள் எப்போது உறங்கும் என்று எனக்குத் தெரியாது என்றேன். ஏன் தெரியாது என்று திரும்பவும் கேட்டான். கவனித்ததில்லை என்று சற்றே எரிச்சலோடு சொன்னேன். உடனே அவன் ஏன் கவனித்தில்லை …

எறும்பின் கால்கள் Read More »

திரைக்கு பின்னால்

        வலைப்பக்கங்களில் சில அபூர்வமான கட்டுரைகள் வாசிக்க கிடைத்திருக்கின்றன. சமீபத்தில் எழுத்தாளர் ஆபீதீனின் வலைப்பக்கத்தில் நாகூர் படைப்பாளிகள் என்ற பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தக் கட்டுரையை வாசித்த போது இவ்வளவு நாட்களாக நான் தேடிக் கொண்டிருந்த ஒரு விஷயம் கவனத்தை ஈர்த்தது. கறுப்பு வெள்ளைப் படங்களைப் பார்க்கும் போது அது யாருடைய கதை, யார் வசனம் எழுதியிருக்கிறார்கள் என்று கவனித்துப் பார்ப்பேன். அது போலவே யார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் என்பதும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய …

திரைக்கு பின்னால் Read More »

ஊரும் வெயிலும்

தேசிய நெடுஞ்சாலையை விஸ்தாரணப்படுத்து பணி சாலையோரம் உள்ள கிராமங்கள், நகரங்களின் தினசரி வாழ்வில் நிறைய மாற்றங்களை உருவாக்கியிருப்பதை இந்த முறை நேரில் கண்டேன். என்ஹெச் 7 எனப்படும் கன்யாகுமரி தேசிய நெடுஞ்சாலை அகலப்பாதையாக விரிவுபடுத்தபட்டிருக்கிறது. நேற்றுவரை ஒடுங்கி இருந்த சாலையோரக் கிராமங்கள் இன்று சாலையைப் பார்த்து திரும்பிக் கொண்டுள்ளன. மறுபக்கம் சாலையோரம் இருந்த வீடுகள், கிணறுகள். தோட்டங்கள் யாவும் காலி செய்யப்பட்டு அவசர அவசரமாக வணிக மையங்களுக்கான வேலைகள் நடைபெறுகின்றன.சாலை மாற்றம் என் ஊரையும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஆறேழு …

ஊரும் வெயிலும் Read More »