தாய்முகம்
நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது தன்னுடைய சிறுவயதில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றினை விவரித்தார். அவரது ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம். பிறந்த சில மாதங்களிலே தாயை இழந்தவர். அம்மாவின் முகம் கூட அவருக்குத் தெரியாது. அவர்கள் ஊரில் அடிக்கடி பெண்களுக்கு பேய் பிடித்து கொள்ளுமாம். அப்படி ஒரு நாள் அவர்கள் வீதியில் இருந்த பெண் ஒருத்திக்கு பேய் பிடித்து கொண்டுவிட்டது என்று பேயோட்டும் நபரை அழைத்து வந்திருக்கிறார்கள் பேயோட்டி தன் கையில் உள்ள …