அறிவிப்பு

யாமம் நாவலுக்கு விருது

            கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற இலக்கிய அமைப்பு ஆண்டு தோறும் தமிழ் எழுத்துலகில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு இயல் விருது அளித்துக் கௌரவப்படுத்துகிறது. இந்த நிகழ்வின் ஒருபகுதியாக சிறந்த நாவல் ஒன்றினைத் தேர்வு செய்து பரிசளிக்கிறார்கள். இந்த ஆண்டு யாமம் நாவல் தேர்வு பெற்று பாராட்டுச் சான்றிதழும் 500 டாலர் பரிசும் பெறுகிறது.

கேள்வியரங்கம்

எனது இணையதளத்தினை தொடர்ந்து பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள். எனக்கு அனுப்பப்பட்ட தனி மின்னஞ்சலில் இருந்த சில கேள்விகளும் சந்தேகங்களும் பொதுவில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியவை என்ற காரணத்தால் அவற்றை மட்டும் தனித்து பதில் சொல்ல விரும்புகிறேன் பிறமொழி இலக்கியம் ஹைதராபாத்திலிருந்து சிவா இக்கேள்வியை அனுப்பியுள்ளார்: தமிழில் உள்ள மொழிபெயர்ப்பு புத்தகங்களில் எவை முக்கியமானவை. புதிய வாசகர்களுக்கு நீங்கள் எதைச் சிபாரிசு செய்வீர்கள். அவை எங்கே கிடைக்கின்றன ? எஸ்ரா : …

கேள்வியரங்கம் Read More »