காலம் மாறுகிறது
சென்றவாரம் புதுச்சேரிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்போது எழுத்தாளர் கி,ராஜநாராயணனைச் சந்திக்கச் சென்றிருந்தோம். கிராவை சந்தித்துத் திரும்பினால் சொந்த ஊருக்குப் போய்த் திரும்பியது போலப் புத்துணர்வு வந்துவிடும். கிராவிடம் நான் கண்ட முக்கிய அம்சம் எவரைப் பற்றியும் புரணி பேசினாலோ, எதிர்மறையாகப் பேசினாலோ பிடிக்காது. வேண்டாத விஷயங்களை ஏன் பேசிகிட்டு என்று ஒதுக்கிவிடுவார். அது போலவே நன்றாகயில்லை என்று தோணுகிற விஷயத்தை நேரடியாகச் சொல்லிவிடுவார். யாரையும் துதி பாட மாட்டார். 96 வயதில் அவர் புதிய நாவலை எழுதியிருக்கிறார் …