எண்ணும் மனிதன்
இந்த ஆண்டு புத்தக கண்காட்சியின் இரண்டாம் நாளில் அகல் பதிப்பகம் வெளியிட்டுள்ள மல்பா தஹான் எழுதிய எண்ணும் மனிதன் என்ற மொழிபெயர்ப்பு நூலை வாங்கி வந்தேன். அட்டையை பார்த்தபோது பாரசீகம் அல்லது அரபு மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். தமிழாக்கம் செய்திருப்பவர் கயல்விழி. மல்பா தஹான் என்பவர் யார். எந்த தேசத்தை சேர்ந்தவர். எந்த ஆண்டு இந்த நூல் வெளியானது என்று எந்த குறிப்பும் புத்தகத்தில் இல்லை. பின் அட்டை குறிப்பும் மிக …