சிறந்த தமிழ் படங்கள்

தி இந்து தமிழ் நாளிதழில் ஞாயிறு தோறும் சிறந்த தமிழ்படங்களைப் பற்றிய தொடர் ஒன்றை எழுதி வருகிறேன். வெண்ணிற நினைவுகள் என்ற அந்த தொடரில்  வெளியான சில கட்டுரைகள். இந்த படங்கள் Youtuberல் காணக்கிடைக்கின்றன. 1) வெண்ணிற நினைவுகள்:அந்த நாள்’ https://www.hindutamil.in/news/literature/532556-vennira-ninaivugal-1.html 2) வெண்ணிற நினைவுகள்: அவள் அப்படித்தான்’ https://www.hindutamil.in/news/literature/537688-vennira-ninaivugal.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search 3) வெண்ணிற நினைவுகள்  :சலங்கை ஒலி’ https://www.hindutamil.in/news/literature/545492-vennira-ninaivukal.html 4) வெண்ணிற நினைவுகள்: வீடு’ https://www.hindutamil.in/news/literature/531531-veedu-movie.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search 5) வெண்ணிற நினைவுகள்: தண்ணீர் தண்ணீர்’ https://www.hindutamil.in/news/literature/539843-vennira-ninaivugal.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search 6) வெண்ணிற …

சிறந்த தமிழ் படங்கள் Read More »

தனிமை கொண்டவர்கள் 1 செகாவின் வக்கீல்

இன்றைய ஊரடங்கு சூழலுக்குப் பொருத்தமான கதையை ஆன்டன் செகாவ் நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுதியிருக்கிறார்.  அந்தக்     கதையின் பெயர் பந்தயம் (The bet). வீட்டிற்குள் தனிமைச்சிறையில் 15 ஆண்டுகள் வசிக்க முடியும் எனப் பந்தயம் கட்டிய ஒரு வழக்கறிஞரைப் பற்றிய கதையது. அக்கதையில் செகாவ் நாமாக வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொண்டு வாழும் போது ஏற்படும் நெருக்கடியை, பல்வேறு விதமான நிலைகளை மிக அழகாக எழுதியிருக்கிறார். இதை அனுபவப் பூர்வமாகப் பலரும் இப்போது உணர்ந்து வருகிறார்கள் என்பதே நிஜம் …

தனிமை கொண்டவர்கள் 1 செகாவின் வக்கீல் Read More »

வாழ்வின் அர்த்தம்.

ஃபிராங் காப்ரா இயக்கிய You Can’t Take It with You படம் பார்த்தேன். இப்படம் இரண்டு அகாதமி விருதுகளைப் பெற்றுள்ளது. 1938ல் வெளியான திரைப்படம். ஆன்டனி பி. கிர்பி என்ற வங்கி அதிபர் ஒரு குடியிருப்பை மொத்தமாக விலைக்கு வாங்கி அங்கே ஒரு தொழிற்சாலை அமைக்க முற்படுகிறார். ஆனால் வாண்டர்ஹோஃப் என்ற கிழவர் மட்டும் தனது வீட்டினை விற்க மறுக்கிறார். அந்த இடம் கிடைக்காத காரணத்தால் அந்தப் பகுதியில் தொழிற்சாலை அமைக்கமுடியவில்லை. வாண்டர்ஹோஃப்பிடமிருந்து அந்த இடத்தை …

வாழ்வின் அர்த்தம். Read More »

சிறார் புத்தகங்கள்

ஆங்கிலம் இந்தி மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் இலவசமாக நேஷனல் புக் டிரஸ்ட் தளத்தில் கிடைக்கின்றன. DOWNLOAD SELECT NBT TITLES FREE https://nbtindia.gov.in/home__90__freebooks.nbt •• ஆன்லைனில் வாசிக்க விரும்புகிறவர்களுக்கு நூற்றுக்கணக்கான  சிறார் புத்தகங்கள் வாசிக்க கிடைக்கின்றன International Children’s Digital Library https://en.childrenslibrary.org/ •• Oxford owl FREE eBook Library •• ரஷ்ய சிறார் கதைகளை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள https://archive.org/search.php?query=subject%3A%22RADUGA%22 ••

கடைசி ரயில்.

ஹாலிவுட்டின் வெஸ்டர்ன் திரைப்படங்களை நான் விரும்பிப் பார்ப்பேன். சில திரைப்படங்கள் வெளியாகி ஐம்பது ஆண்டுகளைக் கடந்த போதும் அது தரும் பரவசம் குறையவேயில்லை. அப்படியொரு திரைப்படம் தான் Last Train from Gun Hill. பரபரப்பான கதை. மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். குறிப்பாகக் கிர்க் டக்ளஸ் மற்றும் ஆன்டனி குவின் இருவரது நடிப்பும் மிகச்சிறப்பாக உள்ளது. மோர்கன் என்ற யு.எஸ்.மார்ஷலாகக் கிர்க் டக்ளஸ் நடித்திருக்கிறார். அவரது மனைவியைச் சில குதிரைவீரர்கள் மடக்கி பலாத்காரம் செய்து கொன்று விடுகிறார்கள் …

கடைசி ரயில். Read More »

குறுங்கதை 40 அந்த மனிதன்

அடர்ந்த காட்டினுள் அமைக்கப்பட்டிருந்த காவல் கோபுரத்தில் அந்த மனிதன் வேலை செய்தான். காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்கு வருபவர்களைத் தடுப்பதும், எதிர்பாராமல் காட்டு தீ ஏற்பட்டால் அதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்வதுமே அவனது வேலை. அந்த மனிதனுக்கு வயது ஐம்பதைக் கடந்திருந்தது. அக்காவல் கோபுரத்தில் சிறியதொரு மரப்பெட்டி, உயரமான நாற்காலி. துப்பாக்கி பைனாக்குலர் டார்ச் லைட் தொலைத்தொடர்பு சாதனங்கள், குடிநீர் மற்றும் தேவையான உணவுப்பொருட்கள் இருந்தன. இவற்றோடு கூடவே ஒரு புத்தகமும் வைத்திருந்தான். ஜெனிசன் தொகுத்த ஏழு தேவதைகள் …

குறுங்கதை 40 அந்த மனிதன் Read More »

குறுங்கதை 39 நாவலின் விதி

அந்த நூலகத்திலிருந்த புத்தக அடுக்கில் இரண்டு நாவல்கள் அருகருகே இருந்தன. ஒரு நாவலின் கதாநாயகன் இன்னொரு நாவலின் கதாநாயகியை ரகசியமாகக் காதலித்தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த நாவலுக்குள் எட்டிப்பார்த்து அவளுடன் பேசவும் பழகவும் முற்பட்டான். அவளும் அவனை விரும்பினாள். ஆனால் தனது காதலை நாவலின் மற்ற கதாபாத்திரங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்களே எனக் கவலைப்பட்டாள். ஆகவே கவலையோடு விலகியே இருந்தாள். நாவலாக இருந்தாலும் அறியாத ஒரு ஆணும் பெண்ணும் காதலிப்பதை மற்ற கதாபாத்திரங்கள் ஒத்துக் கொள்வார்களா …

குறுங்கதை 39 நாவலின் விதி Read More »

வாசிக்க வேண்டிய இந்திய நாவல்கள்

செம்மீன் – மலையாளம் – தகழிசிவசங்கரப்பிள்ளை – தமிழாக்கம் -சுந்தர ராமசாமி இரண்டாமிடம்  – மலையாளம் –  எம்.டி.வாசுதேவன் நாயர் -.தமிழாக்கம் -குறிஞ்சிவேலன் கொல்லப்படுவதில்லை  –  வங்காளம் –  மைத்ரேயி தேவி –  தமிழாக்கம் -சு கிருஷ்ணமூர்த்தி அக்னி நதி –  உருது –  குர்அதுல்ஐன் ஹைதர் – தமிழாக்கம் -சௌரி சிப்பியின் வயிற்றில் முத்து –  வங்காளம்- போதிசத்வ மைத்ரேய-  தமிழாக்கம்- சு.கிருஷ்ணமூர்த்தி ஆரோக்கிய நிகேதனம்- வங்காளம்- தாராசங்கர் பானர்ஜி- தமிழாக்கம்- த.நா.குமாரசாமி சம்ஸ்காரா- கன்னடம்- யு ஆர் …

வாசிக்க வேண்டிய இந்திய நாவல்கள் Read More »

பார்க்க வேண்டிய மலையாளப்படங்கள்.

Chemmeen (1965), https://youtu.be/bGJrCK0y7Bw Perumthachan https://youtu.be/UEZuQnBIUok Vaishali https://youtu.be/hztz1xgkmCE Neelathamara https://youtu.be/kAL3yJYZvlo Kodiyettam https://youtu.be/BVVUKcYzuJU Swayamvaram https://youtu.be/bAeIEVXI_aw Thampu https://youtu.be/4Juw5R_kjyo Uttarayanam https://youtu.be/EITpskf9HAw Kallan Pavithran https://youtu.be/GclEWR1RlPc Yavanika https://youtu.be/SnwdhIHKiUQ ••

பார்க்க வேண்டிய இந்திப் படங்கள்

. Mughal E Azam B&W 1960 – Historical Movie https://youtu.be/4r0djZAW8Hs Mother India 1957 Full Movie HD | Nargis , Sunil Dutt https://youtu.be/T1xTqCNTGT8 Milan (1967) Full Hindi Movie https://youtu.be/Xcx0410JPC Devdas [1955] – Dilip Kumar Hit Movie https://youtu.be/P7WpuL3O5lQ Yahudi B&W 1958 – Action Movie https://youtu.be/Y-WMTLXOCIM Pyaasa Full Movie | Old Hindi Movie HD | Guru Dutt https://youtu.be/WJK45r-j6TU …

பார்க்க வேண்டிய இந்திப் படங்கள் Read More »