என் வாசகர் உலகம்
தேசாந்திரி யூடியூப் சேனலில் எனது உரை வெளியாகியுள்ளது. சில வருஷங்களுக்கு முன்பு புத்தாண்டு தினத்தின் போது ஆற்றிய உரையிது. https://youtu.be/W8RN_8EfQk0
தேசாந்திரி யூடியூப் சேனலில் எனது உரை வெளியாகியுள்ளது. சில வருஷங்களுக்கு முன்பு புத்தாண்டு தினத்தின் போது ஆற்றிய உரையிது. https://youtu.be/W8RN_8EfQk0
அவனது பெரியப்பாவின் வீடு அதே தெருவில் தானிருந்தது. ஆனால் இந்த முப்பத்தைந்து வருசத்தில் ஒருமுறை கூட அவன் பெரியப்பா வீட்டிற்குப் போனதேயில்லை அப்பா இறந்தபிறகு அம்மாவும் பாட்டியும் தான் அவனை வளர்த்தார்கள். மிகவும் கஷ்டமான குடும்பச் சூழல். வறுமை. அப்போதும் கூடப் பெரியப்பா ஒருவேளை சோறு போட்டதேயில்லை. எப்போதாவது அவர்கள் வீட்டினைக் கடந்து போகையில் அவனைக் கண்டதும் பெரியப்பா முகத்தைத் திருப்பிக் கொண்டுவிடுவார். அப்பா இறக்கும் முன்பாகவே பெரியப்பாவிற்கும் அவருக்கும் சண்டை. அதுவும் பூர்வீக சொத்தைப் பெரியப்பா …
அவர் ஓய்வு பெறுவதற்கு இன்னமும் மூன்று ஆண்டுகளே இருந்தன. அந்த அலுவலகத்தின் உயர்பதவியிலிருந்தார். ஒவ்வொரு நாளும் காலையில் அலுவலகம் வந்து சேர்ந்தவுடன் அவருக்கு நீண்டகாலம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது போன்ற அசதி வந்துவிடும். திடீரென உடல் கனமாகிவிட்டதைப் போல உணருவார். எல்லாப் பொருட்களும் பார்த்துப் பழகியவை. அதே ஊழியர்கள். அதே ஜன்னல். அதே திரைச்சீலை. கண்ணாடி டம்ளர்கள்.மரமேஜை. நாற்காலி. ஏன் கழிப்பறையில் ஓடும் கரப்பான் பூச்சி கூடப் பார்த்துப் பார்த்துப் பழகியது தான். எதுவும் புதியதில்லை. எதிலும் …
கல்வியாளர். நெ.து.சுந்தர வடிவேலு இரண்டு முறை சோவியத் யூனியனுக்குப் பயணம் செய்திருக்கிறார். அந்தப் பயண அனுபவங்களைச் சோவியத் மக்களோடு, நான் கண்ட சோவியத் ஒன்றியம் என இரண்டு பயண நூல்களாக எழுதியிருக்கிறார். இரண்டும் இணையத்தில் தரவிறக்கம் செய்யக்கிடைக்கிறது. இன்றைய தலைமுறைக்குச் சோவியத் ஒன்றியம் பற்றியோ அதன் வாழ்க்கை முறை குறித்தோ அதிகம் தெரியாது. அவர்கள் இந்த நூலை வாசித்தால் நிச்சயம் வியந்து போவார்கள். இந்தியாவிலிருந்து சோவியத் சென்று வந்த எழுத்தாளர்கள் பலரும் தனது பயண அனுபவத்தை நூலாக்கியிருக்கிறார்கள். …
தொலைவில் காணும் போது அந்த ஊர் மிகச்சிறியதாகவே தெரிந்தது. ஆண்டுக்கணக்கில் இலக்கற்று நடந்து திரிந்த அந்த மனிதன் சோர்ந்து போயிருந்தான். பசியும் தாகமும் வாட்டின. அந்த ஊரினுள் வந்தவுடன் ஒருவர் கூட அவன் யார் எந்த ஊர் என எதையும் விசாரிக்கவில்லை. மாறாக எங்கள் வீட்டிற்குச் சாப்பிட வாருங்கள் எனப் பலரும் அழைத்தார்கள். ஒரு வீட்டில் சாப்பிடுவதற்கு ஒத்துக் கொண்டான். அந்த வீட்டிலிருந்தவர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய மகனை வரவேற்பது போல ஆசையாக உணவளித்தார்கள். …
அறிவியல் மேதை ஜி டி நாயுடு எழுதிய நான் கண்ட உலகம் என்ற பயணக்கட்டுரை நூலை வாசித்தேன். இணையத்தில் தரவிறக்கம் செய்யும்படி கிடைக்கிறது. இலங்கையிலிருந்து கிளம்பி ஒராண்டு காலம் உலகம் முழுவதையும் சுற்றிவந்திருக்கிறார் ஜி.டி நாயுடு. இது போல நான்கு முறை வேறுவேறு பயணங்கள். ஒவ்வொன்றும் பலமாத காலங்கள். இந்தப் பயணத்தில் தனக்கு நடந்த சில முக்கிய நிகழ்வுகளை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். சுவாரஸ்யமான பயணநூல். குறிப்பாக அவர் இலங்கையிலிருந்து பயணம் செய்த பிரெஞ்சு கப்பல் பாதிக்கடலில் …
. The Stranglers of Bombay என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த்தேன். 1959 ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்கியவர் டெரன்ஸ் ஃபிஷர். அமெரிக்க எழுத்தாளர் டேவிட் ஜெலாக் இதன் திரைக்கதையை எழுதியிருக்கிறார். தக்கீகள் என்று அழைக்கப்படும் வட இந்தியக் கொள்ளையர்களைப் பற்றிய படம். புனைவாக எழுதப்பட்ட கதை. ஆனால் பரபரப்பாக படம் செல்கிறது. 1830களில் காளி உபாசகர்கள் எனச்சொல்லிக் கொண்ட வழிப்பறிக் கொள்ளையர்கள் பயணிகளை மடக்கி அவர்களின் நகைபொருட்களைப் பறித்துக் கொண்டு கழுத்தில் துணியைப் போட்டு …
தேரடித் தெருவிலிருந்தது அந்தச் சிறிய சைவ உணவகம். அங்கே வேலை செய்த ஒரு சர்வருக்கு விசித்திரமான பழக்கமிருந்தது. ஒரு நாளில் யார் யார் எவ்வளவு தொகைக்குச் சாப்பிட்டார்கள் என்ற பில் கணக்கைத் துல்லியமாக மனதில் வைத்திருப்பான். அந்த நாளின் முடிவில் அன்று மிக அதிகமான தொகைக்குச் சாப்பிட்டவர் யார் என்று தேர்வு செய்வான்.அதில் அவனுக்கு ஒரு சந்தோஷம். அவனிடம் இப்படி ஒரு திறமை இருப்பது யாருக்கும் தெரியாது. சில நேரம் அவன் தோசை என்பதற்குப் பதிலாக ரூ …
NOMAD: IN THE FOOTSTEPS OF BRUCE CHATWIN என்ற வெர்னர் ஹெர்சாக் இயக்கிய ஆவணப்படத்தைப் பார்த்தேன்.. இதில் ஹெர்சாக் அவரது நண்பரும் நாவலாசிரியருமான புரூஸ் சாட்வின் குறித்த நினைவுகளை அவரது பாதையிலே பயணித்துப் பகிர்ந்து கொள்கிறார் சார்லஸ் புரூஸ் சாட்வின் பயண எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். அவரது முதல் புத்தகம், In Patagonia (1977) மிகவும் பிரபலமானது. கதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டிய சாட்வின் On the Black Hill (1982) நாவலுக்காக …
ஜப்பானின் ஓனோ நோ கோமாச்சி மற்றும் இசுமி ஷிகிபு என்ற இரண்டு பெண் கவிஞர்களின் காதல் கவிதைகளின் தொகுப்பு நூல் The Ink Dark Moon: Love Poems by Ono no Komachi and Izumi Shikibu அவர்களின் கவிதைகள் பொதுவாக டாங்கா என்ற கவிதை வடிவத்தினைச் சார்ந்தவை. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியினைச் சேர்ந்தவர் ஓனோ நோ கோமாச்சி. இவரது காதல் உறவு பற்றி நிறையக் கதைகள் இருக்கின்றன. அதில் ஒன்றில் இவர் பேரரசரிற்காகக் காத்திருந்த …