குறுங்கதை 55 கணிதப்புதிர்
கணிதப்புதிர் ஒன்றிற்குத் தீர்வு காணுவதற்காக ஆர் எஸ் சர்மா தனது வாழ்நாளில் எழுபது ஆண்டுகளைக் கழித்திருந்தார். அவரது பதினாறாவது வயதில் ஒரு நாள் பள்ளி ஆசிரியரும் வானவியல் அறிஞருமான அவரது தந்தை அழைத்து அந்தக் கணிதப்புதிரைப் பற்றிச் சொன்னார். இதுவரை உலகில் எவராலும் அந்தக் கணிதப்புதிர் தீர்த்துவைக்கப்படவில்லை. ஆகவே அதைச் சர்மா தீர்த்துவிட்டால் உலகின் கவனம் அவர் மீது விழும். கணிதமேதையாகக் கொண்டாடப்படுவார் என்று சொன்னார் தந்தை. சர்மா தந்தையிடமிருந்தே கணிதம் கற்றுக் கொண்டார். ஒன்பது வயதிற்குள் …