குறுங்கதை 62 சிறியதே அழகு
பிரம்மாண்டமான மலையின் அருகில் அமைந்திருந்தது அந்தப் பௌத்த மடாலயம். அதில் இளந்துறவிகள் நிறைய இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ஒரு புதுப் பயிற்சி அளிக்கப்பட்டது. அன்றைய நாளின் பயிற்சியாகப் பிக்கு தரசக் எதிரேயுள்ள மலையைச் சிறியதாக்கும்படி கட்டளையிட்டார். இவ்வளவு பெரிய மலையை எப்படிச் சிறியதாக்குவது என இளந்துறவிகளுக்குத் தெரியவில்லை. அவர்கள் மலையின் அருகே சென்று கண்மூடி தியானம் செய்தார்கள். சிலர் மந்திரம் சொன்னால் சிறியதாகிவிடும் என நினைத்து உச்சாடனம் செய்தார்கள். ஒருவராலும் மலையைச் சிறியதாக்க முடியவில்லை. மாலை நேரம் பிக்கு தரசக் அங்கே வந்து …