பீட்டர்ஸ்பெர்க்கில் தஸ்தாயெவ்ஸ்கி
நேற்று வேலூரில் ஜே.எம். கூட்ஸி எழுதிய பீட்டர்ஸ்பெர்க் நாயகன் (The Master of Petersburg / J.M. Coetzee) நாவல் குறித்து உரையாற்றினேன். இந்த நாவல் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. சா. தேவதாஸ் இந்நாவலை மொழியாக்கம் செய்துள்ளார். வேலூரில் மாலை நான்குமணி முதலே மழையாக இருந்தது. மழைக்குள் நனைந்தபடியே பார்வையாளர்கள் திரண்டு வந்திருந்தார்கள். அரங்கு நிரம்பிய கூட்டம். இந்த உரையைக் கேட்பதற்காக வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் அதிகம். நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த கனலி …