புதிய நாவல்
மதுரை புத்தகக் கண்காட்சியில் எனது புதிய நாவல் ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை வெளியாகவுள்ளது. அது குறித்த காணொளி •••• https://youtu.be/IdPVqFqp6aw
மதுரை புத்தகக் கண்காட்சியில் எனது புதிய நாவல் ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை வெளியாகவுள்ளது. அது குறித்த காணொளி •••• https://youtu.be/IdPVqFqp6aw
அலெக்சாண்டர் சுக்ரோவ் ரஷ்யாவின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர். திரைக்கலையினை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்ற கலைஞர். இவரது திரைப்படங்களை poetic cinema என்கிறார்கள். சுக்ரோவ் தீவிர இலக்கிய ஈடுபாடு கொண்டவர். ரஷ்யாவின் மனசாட்சியாகத் திகழுகிறார் என்று திரை விமர்சகர்கள் பாராட்டுகிறார்கள். இவரது Russian Ark ஒரே ஷாட்டில் எடுக்கபட்ட சிறந்த திரைப்படம். பீட்டர்ஸ்பெர்க்கிலுள்ள ஹெர்மிடேஜ் ம்யூசியத்தினுள் முழுப்படமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. கலைநேர்த்தி மிக்கத் திரைப்படமது. சுக்ரோவ் ஹிட்லரை மையாக வைத்து Moloch என்ற படத்தை இயக்கினார். இது போலவே லெனினை …
கிர்ஸ்டன் டான் என்ற பெண் இயக்குநர் இயக்கிய Pop Aye என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். 2017 வெளியான திரைப்படம். தானா என்ற கட்டிடக்கலைஞர் ஒரு யானையை அழைத்துக் கொண்டு சாலையில் செல்லும் காட்சியுடன் படம் துவங்குகிறது. யானையின் முதுகில் கிழிந்த பை போன்ற ஒன்று தொங்குகிறது. காயம்பட்ட காலுடன் யானை மெதுவாக நடக்கிறது. பாங்காக்கின் பிரதான சாலையில் தானா யானையோடு நடந்து வருகிறார். பெருநகரத்தில் வாழும் ஒரு மனிதன் ஒரு காரை, பைக்கை, ஏன் ஒரு கப்பல் …
சொல்வனம் இணைய இதழ் இங்கிலாந்தில் வசிக்கும் ஜெர்மானிய எழுத்தாளரான டபில்யூ.ஜீ. ஸீபால்ட் குறித்துச் சிறப்பிதழ் ஒன்றை உருவாக்கியுள்ளது. அரிய கட்டுரைகள், அறிமுகத்துடன் ஸீபால்ட் குறித்த விரிவான பார்வையைத் தரும் விதமாக சிறப்பிதழ் உருவாக்கப்பட்டுள்ளது. சொல்வனம் ஆசிரியர் குழுவினருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். இதழின் முக்கியக் கட்டுரைகளை எழுதியிருப்பவர் நம்பி கிருஷ்ணன். இவரது கட்டுரைகளை நான் விரும்பி வாசிப்பவன். இந்த இதழில் இவர் ஸீபால்ட் பற்றி எழுதியுள்ளதையும் மொழியாக்கம் செய்திருப்பதையும் வாசித்த போது பிரமிப்பு ஏற்பட்டது. எவ்வளவு …
யுவான் ருல்போ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், போர்ஹெஸ், ஆக்டோவியா பாஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கவிஞர் பிரம்மராஜன், ஆர். சிவகுமார், எதிராஜ் அகிலன், நாகார்ஜுனன், சம்யுக்தா, மணிக்கண்ணன் ஆகியோர் சிறப்பாக மொழியாக்கம் செய்து வெளியிட்ட இந்நூல் எனக்கு மிகவும் பிடித்தமானது. நவீன தமிழ் சிறுகதையை மாற்றம் செய்ததில் இந்நூலுக்கு முக்கிய பங்கிருக்கிறது. பாஸ்கரன் ஒவியத்துடன் சிறந்த வடிவமைப்பில் நேர்த்தியாக உருவாக்கபட்டிருந்தது இந்நூலை பிரம்மராஜன் மறுபதிப்பு செய்தால் இன்றைய வாசகர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். …
மார்க்ரெட் அட்வுட் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். Margaret Atwood: Once in August என்ற இந்த ஆவணப்படத்தை இயக்கியிருப்பவர் மைக்கேல் ரபோ. 1984ல் வெளியானது மைக்கேல் ரபோ எழுதும் கடிதம் ஒன்றின் மூலம் ஆவணப்படம் துவங்குகிறது. கனேடிய எழுத்தாளர்கள் பலரையும் பற்றி ஆவணப்பபடம் எடுத்துவரும் தான் அட்வுட் பற்றிய ஆவணப்படம் ஒன்றை உருவாக்க விரும்புவதாகவும் அது அவரைப் பிரேதப் பரிசோதனை போலக் கூறுபோடுவதாக ஒரு போதுமிருக்காது. அவர் விரும்புகிறபடி, விரும்பும் இடத்தில் படப்பிடிப்பு நடத்தப்படும். அவரது …
இந்திய சினிமாவின் பெருமைக்குரிய இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் மதவெறியர்களால் தொடர்ந்து தாக்கப்படுவதையும் அவமதிக்கப்படுவதையும் கண்டித்து ஆகஸ்ட் 7 புதன்கிழமை கேரளாவின் திருச்சூரில் நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். அடூர் கோபாலகிருஷ்ணன் நம் காலத்தின் மகத்தான கலைஞன். அவரைச் சிறுமைப்படுத்தும் விதமாக கேரளாவில் மதவெறியர்கள் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருவதை கண்டித்துப் பேசியதுடன் தமிழ் எழுத்துலகம் அடூர் பக்கம் நிற்கும் என்று உரையாற்றினேன். இந்நிகழ்வில் மலையாளத் திரையுலகம் மற்றும் எழுத்துலகினைச் சார்ந்த முக்கியக் கலைஞர்கள், படைப்பாளிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். …
நாளை மதியம் ஈரோடு வருகிறேன். மாலை ஐந்து மணி முதல் ஈரோடு புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கில் இருப்பேன். விருப்பமான வாசகர்கள் சந்திக்கலாம். திங்கள் , செவ்வாய் இரண்டு நாட்களும் ஈரோட்டில் இருப்பேன் தேசாந்திரி அரங்கு எண் : 104 •• ஆகஸ்ட் 3 .2019
மதுரை புத்தகக் கண்காட்சியில் எனது புதிய நாவல் வெளியாகிறது ஒரு சிறிய, விடுமுறைக்காலக் காதல் கதை என்பது நாவலின் தலைப்பு. இது ஒரு காதல் கதை. கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களுக்குத் தனியழகு இருப்பது போலவே காதல் கதைகளுக்கும் தனி அழகிருக்கிறது. கோடைவிடுமுறையில் துவங்கி கோடைக்காலம் தோறும் சந்தித்துக் கொள்ளும் இருவரின் காதல் கதை. உப பாண்டவம் துவங்கி இடக்கை வரையிலான எனது நாவல்கள் யாவும் தீவிரமான கதைக்களத்தைக் கொண்டவை. நிறையக் கதாபாத்திரங்கள், கிளைக்கதைகள் என விரிபவை.ஆனால் இந்நாவல் …
சிற்பி இலக்கிய விருது – 2019| தேவதச்சன் கவிதைகள் குறித்த எனது உரையின் காணொளி. https://youtu.be/Wqb2WfjQeNo