குவிகம் இலக்கியச் சந்திப்பு
குவிகம் இலக்கிய வாசல் மாதந்தோறும் நடத்தி வரும் இலக்கியச்சந்திப்பு நிகழ்வில் ஆகஸ்ட் 20 சனிக்கிழமை நான் உரையாற்றுகிறேன், நிகழ்ச்சி டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் மாலை 6 : 30 மணிக்கு நடைபெறுகிறது
குவிகம் இலக்கிய வாசல் மாதந்தோறும் நடத்தி வரும் இலக்கியச்சந்திப்பு நிகழ்வில் ஆகஸ்ட் 20 சனிக்கிழமை நான் உரையாற்றுகிறேன், நிகழ்ச்சி டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் மாலை 6 : 30 மணிக்கு நடைபெறுகிறது
ஜெயராவ் இயக்கத்தில் நான் எழுதிய தஸ்தாயெவ்ஸ்கியின் நிழல்கள் என்ற நாடகத்தை இன்று இரவு 7 : 30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாடகமது. தமிழ் தொலைக்காட்சி ஒன்று தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை குறித்த நாடகம் ஒன்றை ஒளிபரப்பு செய்வது இதுவே முதல்முறை. மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றிகள்
கவிஞர், நா.முத்துக்குமார் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அருமை நண்பனை நினைத்து அடக்கமுடியாமல் கண்ணீர் பீறிடுகிறது. என் அஞ்சலியையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்
கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இலக்கியச் சாதனை சிறப்பு விருது 2016 வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்குக் காரணமாக இருந்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் மற்றும் தேர்வுக் குழுவினர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள். தமிழ் இலக்கியச் சாதனை 2016 விருதுக் கேடயமும், ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கப்படுகிறது. விருது விழா சென்னை, கவிக்கோ மன்றத்தில் 27 ஆகஸ்டு 2016 சனிக்கிழமை, மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது. கனடா …
மதுரையில் ஆகஸ்ட் 13 மாலை நடைபெறுவதாக இருந்த இடக்கை நாவலுக்கான விமர்சன அரங்கம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரை புத்தகக் கண்காட்சியைஒட்டி செப்டம்பர் முதல்வாரம் இந்த நிகழ்வு நடைபெறும். ••
ஈரோடு புத்தகத் திருவிழாவில் செவ்வாய்கிழமை( 09 .08.2016 ) உரையாற்றினேன். பெரும்திரளான கூட்டம். புத்தகக் கண்காட்சியை மிகச்சிறப்பாக ஸ்டாலின் குணசேகரன் ஏற்பாடு செய்துள்ளார். காலையில் நண்பர்களை சந்தித்து அறையில் உரையாடிக் கொண்டிருந்தேன். மதியம் வேடியப்பன் மற்றும் அண்ணன் அறிவுமதியோடு ஐயப்பா மெஸ்ஸிற்கு சாப்பிடச் சென்றேன். அறைக்குத் திரும்புவதற்குள் நான்கு இளைஞர்கள் கோவையில் இருந்து வந்து காண்பதற்காக நின்றிருந்தார்கள். அவர்களுடன் புத்தக கண்காட்சியினுள் சென்று அரங்கினைப் பார்வையிட்டேன். ஈரோடு சிந்தனைப் பேரவையின் தன்னார்வத் தொண்டர்கள் மிகுந்த பாராட்டிற்குரியவர்கள். காலை ரயில் …
என்னுடைய சிறுகதை ஒன்றை shafi cherumavilayi மலையாளத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். Prabhatha Rashmi இதழில் வெளியாகியுள்ளது. சஃபிக்கு மனம் நிரம்பிய நன்றி. ••
ஆகஸ்ட் 1 இரவு திருவண்ணாமலையில் பவா. செல்லதுரை ஏற்பாடு செய்திருந்த நிலம் இலக்கியக் கூட்டத்தில் நோபல்பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பற்றி உரையாற்றினேன். எனக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளரைப் பற்றிப் பேசியது சந்தோஷம் அளித்தது. மார்க்வெஸின் புகழ்பெற்ற சிறுகதைகளையும், எழுத்துமுறையின் சிறப்புகளையும் லத்தீன் அமெரிக்க அரசியல் சூழலையும் பற்றி விரிவாகப் பேசினேன். பார்வையாளர்கள் நிரம்பியிருந்தார்கள். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக திருச்சியிலிருந்து ஒரு வாசகர் வந்திருந்தார். இரண்டு பேர் சேலத்திலிருந்து வந்திருந்தார்கள். திருவண்ணாமலையில் தேர்ந்த …
இடக்கை நாவலுக்கான விமர்சன அரங்கினைக் கடவு இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது மதுரையில் ஆகஸ்ட் 13 மாலை நார்த்கேட் ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது
ஈரோடு புத்தக கண்காட்சியில் ஆகஸ்ட் 9 செவ்வாய்கிழமை மாலை உரையாற்றுகிறேன்