இடக்கை – நீதிமுறையின் அரசியல்

-மணி செந்தில் தமிழ் மொழியின் நாவல் வரலாறு மிக நீண்ட பாரம்பரிய பெருமைகள் கொண்டது. தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் 1879 ஆம் ஆண்டு வெளியானது. அதன் ஆசிரியர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவரிலிருந்து தொடங்கி இன்னும் செழுமையாக நீண்டு கொண்டிருக்கும் எண்ணற்ற எழுத்தாளர்கள் தமிழ் மொழியின் நவீன நாவல் வகைமையை தரம் குறையாமல் தங்கள் எழுத்துக்களால் பெருமை சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவ்வகையில் சமகால எழுத்தாளர்களில் மிக முக்கிய எழுத்தாளராக எஸ்.ராமகிருஷ்ணன் விளங்குகிறார். …

இடக்கை – நீதிமுறையின் அரசியல் Read More »

கவிதை எனும் வட்டக்கண்ணாடி.

There are three idealists: God, mothers and poets! They don’t seek the ideal in completed things— they find it in the incomplete. என்ற பீட்டர் ஆல்டென்பெர்க்கின் (Peter Altenberg) வரிகள் தான் அவரைத் தேடி வாசிக்க வைத்தது. ஆல்டென்பெர்க் ஆஸ்திரியாவின் முக்கியக் கவிஞர். வியன்னாவிலுள்ள கபே சென்ட்ரல் என்ற காபிஷாப் தான் இவரது உலகம். இவரது பெரும்பான்மைக் கவிதைகள் இந்தக் காபிஷாப்பில் வைத்து எழுதப்பட்டவை. இவரை “coffee house …

கவிதை எனும் வட்டக்கண்ணாடி. Read More »

வரலாற்றின் குரல்

தினம் ஒரு தகவல் என்ற நிகழ்ச்சி ரேடியோவிலும் தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பபடுகிறது. இவற்றில் பெரும்பாலும் புகழ்பெற்ற மனிதர்கள். நிகழ்ச்சிகள். பொதுவான வரலாற்றுச் சம்பவங்கள் பற்றியே பேசப்படுகின்றன. மறந்து போனவற்றை நினைவுபடுத்துவது போல மட்டுமே இந்நிகழ்ச்சிகள் உருவாக்கபடுகின்றன. ஆனால் மனித குல வரலாற்றில் முக்கியமான, அறியப்படாத செய்திகளை. மறைக்கப்பட்ட வரலாற்றை. அறிவியல் உண்மைகளை, ஆளுமைகளை முதன்மைப்படுத்தித் தனித்துவமான பார்வையுடன் தினம் ஒரு தகவல் எழுதப்பட்டால் எப்படியிருக்கும் என்பதற்கான உதாரணமான உள்ளது எட்வர்டோ கலியானோ எழுதிய ‘சில்ரன் ஆஃப் தி டேஸ்: …

வரலாற்றின் குரல் Read More »

கி.ரா விருது விழா

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணனுக்கு  கனடா இலக்கியத் தோட்டத்தின்  இலக்கியச்சாதனை சிறப்பு விருது வழங்கும் விழா வருகின்ற  27 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஆழ்வார்பேட்டையிலுள்ள கவிக்கோ அரங்கில் நடைபெறவுள்ளது. தி இந்து நாளிதழ் விழாவை ஒருங்கிணைத்து நடத்துகிறது. இவ்விழாவில் கிராவின் படைப்புலகம் குறித்து நான் உரையாற்றுகிறேன். விழாவில்அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

உணவை மறுத்தவள்.

2016ம் ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசைப் பெற்ற நாவல் ‘தி வெஜிடேரியன்’. தென் கொரியாவைச் சேர்ந்த ஹன் காங்க் (Han Kang) எழுதியது. கொரிய சமகால நாவல்களில்TREES ON A SLOPE – Hwang Sun-wo˘n மற்றும் THE DWARF- Cho Se-hu˘i ஆகிய இரண்டினை வாசித்திருக்கிறேன். சமகாலக் கொரியப் படைப்புகளின் வழியே மிதமிஞ்சிய நுகர்வு கலாச்சாரம் கொரிய வாழ்வினை எவ்வாறு பாதித்துள்ளது என்பதையும், குடி, போதை. பாலின்பம், வன்முறை எனப் பெருநகரவாழ்வு சிதைந்து போயிருப்பதையும் அறிந்து …

உணவை மறுத்தவள். Read More »

உடலின் விதி

விர்ஜிலியோ பினேரா (Virgilio Piñera) க்யூபாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர். இவரது மாமிசம் (Meat) சிறுகதையைத் தமிழில் கவிஞர் ரவிக்குமார் மொழியாக்கம் செய்துள்ளார். மிக முக்கியமான சிறுகதை. இக்கதை இப்படித்தான் துவங்குகிறது திரு. அன்சால்டோ மட்டும்தான் அந்த நகரத்தில் விதிவிலக்கு. எந்தக் கலக்கமும் இல்லாமல் ஒரு பெரிய கத்தியை அவன் தீட்டிக்கொண்டிருந்தான். பிறகு தனது பேண்ட்டை முழங்கால் வரை கீழே தள்ர்த்திவிட்டான். தனது இடதுபுற பிருஷ்டத்திலிருந்து ஒரு துண்டுக் கறியை வெட்டி எடுத்தான். உப்பும் வினிகரும் போட்டு …

உடலின் விதி Read More »

குற்றமும் காதலும்.

லத்தீன்அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் எர்னெஸ்டோ சபதோ (Ernesto Sábato ) முக்கியமானவர். அர்ஜென்டினாவைச் சேர்ந்த இவரைப் போர்ஹேயின் முன்னோடி என்கிறார்கள். எர்னெஸ்டோ சபதோ இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அர்ஜென்டினாவில் நடைபெற்ற மல்வினாஸ் போரில் காணாமல் போனவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் பற்றி விசாரிக்க உருவாக்கபட்ட மனித உரிமைக் கமிஷனின் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். இவரது The Tunnel நாவல் அளவில் மிகக்சிறியது. ஆனால் அதன் தாக்கம் மிகப்பெரியது. நாம் பொதுவில் மற்றவர்களின் குற்றங்கள் குறித்து எளிதாகத் தீர்ப்பு எழுதுகிறோம். …

குற்றமும் காதலும். Read More »

கவிஞனின் நிழல்

நவீன ரஷ்யக்கவிதையுலகின் தனிப்பெரும் கவியாக இருந்தவர் ஒசிப் மெண்டல்ஷ்டாம். அக்மேயிசம் ( Acmeism) என்ற கவிதைக்கோட்பாட்டினை உருவாக்கியவர். ஸ்டாலினைக் கிண்டல் செய்து கவிதை எழுதினார் என்று கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கபட்ட மெண்டல்ஷ்டாம் கடுமையான சித்ரவதைகளை அனுபவித்து மனச்சிதைவிற்கு உள்ளானார். அவரது கவிதைகளைப் பத்திரிக்கையில் வெளியிடுவது தடைசெய்யப்பட்டது. மெண்டல்ஷ்டாம் கவிதைகள் அத்தனையும் நினைவில் வைத்திருந்து நடமாடும் புத்தகமாகத் திகழ்ந்தவர் அவரது மனைவி நடாஷ்டா. அவரது நினைவுகளில் இருந்த கவிதைகளே பின்னாளில் மீள்உருவாக்கம் செய்யப்பட்டு நூலாக வெளிவந்தன. மெண்டல்ஷ்டாமின் …

கவிஞனின் நிழல் Read More »

பால்யத்தின் சிற்றலைகள்

பேரலைகளின் சீற்றத்தை விடவும் சிற்றலைகளின் நடனம் வசீகரிக்கக் கூடியது. நாவலிலும் அப்படித்தான். போரும் அமைதியும், கரமசோவ் சகோதரர்கள் போன்ற அடர்த்தியான, பல்வேறு பின்னல்களும் அடுக்குகளும் கொண்ட நாவல்கள் தரும் வாசிப்பு அனுபவம் ஒருவிதம் என்றால் ஒட்டுச்சில்லை வீசி எறியும்  போது அது தண்ணீரில் எழும்பும் சிற்றலை போலச் சிறியதும் பெரியதுமாக வாழ்வு அனுபவங்களைத் தொடுத்து எழுதப்படும் நாவல்கள் முற்றிலும் புதுவகை வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன. தமிழில் இந்த வகை நாவலுக்கு உதாரணமாகக் காசியபனின் அசடு மற்றும் ஹெப்சிபா …

பால்யத்தின் சிற்றலைகள் Read More »

எஹுதா அமிக்ஹாய்

சமகால உலகக்கவிஞர்களில் மிக முக்கியமானவர் எஹுதா அமிக்ஹாய் (Yehuda Amichai). இவரது தேர்வு செய்யப்பட்ட கவிதைகளின் தொகுப்பை சமீபத்தில் வாசித்தேன். மனஎழுச்சியூட்டும் அற்புதமான தொகுப்பு. இஸ்ரேலைச் சேர்ந்த அமிக்ஹாய் கவிதைகள் ஹீப்ரூ மொழியின் மரபான கவித்துவத்தையும் நவீனபார்வையையும் ஒன்று கலந்ததாகும். இவரது கவிதையின் தனித்துவமாக நான் கருதுவது உருவகங்கள். நவீன கவிதையுலகில் இவர் அளவிற்கு உருவகங்களைப் புதுமையாக கையாளும் ஒருவரை அறிந்ததில்லை. தினசரி வாழ்க்கையிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் சமய நம்பிக்கைகளிலிருந்தும் புராணீகத்திலிருந்தும் இவர் உருவாக்கும் உருவகங்கள் கவிதையின் மினுங்கும் …

எஹுதா அமிக்ஹாய் Read More »