மணற்புயலுக்குள் இரண்டு பிக்குகள்
பௌத்தம் தொடர்பான திரைப்படங்களைத் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதில் NFDC தயாரித்த Trishagni என்ற ஹிந்திப்படம் கிடைத்தது. நேற்றிரவு அதைப் பார்த்தேன். 1988ல் வெளியான இப்படத்தை நடிகரும் எழுத்தாளருமான Nabendu Ghosh இப்படத்தை இயக்கியுள்ளார். தேசிய விருது பெற்றுள்ளது இப்படம் வங்காள எழுத்தாளர் Sharadindu Bandyopadhyayவின் சிறுகதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டுள்ளது. Trishagni என்பதற்கு மணற்புயல் என்று அர்த்தம். கிமு 200ல் பாலைவன பிரதேசத்திலுள்ள சாரிபுத் என்ற நகரில் இக்கதை நடக்கிறது. அங்கு புகழ்பெற்ற பௌத்த …