கோணங்கியுடன்

இரண்டு நாட்கள் கோணங்கியுடன் சுற்றித்திரிந்தேன். நானும் அவரும் ஒன்றாக திரிந்த நாட்கள்  மறக்கமுடியாதவை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் இணைந்து சுற்றியிருப்போம். எத்தனையோ இலக்கியவாதிகளைத் தேடிச் சென்று சந்தித்திருக்கிறோம். வரலாற்றுபுகழ்மிக்க இடங்களை தேடி அலைந்திருக்கிறோம். எவரெவர் வீடுகளிலோ தங்கிப்பேசி கடந்து போயிருக்கிறோம். இன்று அவரது பாதையும் பயணமும் வேறு. ஆனாலும் மனதில் அந்த நெருக்கம் மறையவேயில்லை. இருவரும் ஒன்றாக சாத்தூர்  சென்று  நண்பர் தியாகுவை அழைத்துக் கொண்டு பாபநாசம் சென்றோம். அங்கே ஒரு அறை எடுத்துக் கொண்டு …

கோணங்கியுடன் Read More »

கோடைப்பயணம்

நாளை முதல் பதினைந்து நாட்கள்  கோடைப் பயணம் புறப்படுகிறேன். ஜுன் 7 அன்று சென்னை திரும்புவேன். ராஜபாளையத்தில் ஜுன் 4  அன்று நண்பர் சா. தேவதாஸ் ஒரு இலக்கியக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளார்.  இடம் நேரம் குறித்து சில நாட்களில் பதிவிடுகிறேன் ஜுன் 5 மதுரையில் நண்பர் முருகேச பாண்டியன் மகள் திருமண நிகழ்விலும் ஜுன் 6 கவிஞர் கலாப்ரியா மகள் திருமண நிகழ்விலும் கலந்து கொள்ள இருக்கிறேன் ••

இமயத்தின் மணியோசை.

இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்ட ஆங்கிலப்படம் BLACK NARCISSUS, 1947ல் வெளியானது. மைக்கேல் போவல் இயக்கியுள்ளார். சிறந்த கலையமைப்பு. ஒளிப்பதிவு என இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ள இப்படத்தைச் சமீபத்தில் பார்த்தேன். இமயமலையின் மோபு என்ற இடத்தில் கன்னியர் மடம் ஒன்றை உருவாக்க முயலும் கன்னியாஸ்திரிகளின் கதையே பிளாக் நார்சிசஸ். இளவரசன் திலீப் ராய் பயன்படுத்தும் வாசனைத்திரவியத்தின் பெயரது. மையக்கதையின் குறியீடாகவே அந்த வாசனை திரவியம் அடையாளப்படுத்தபடுகிறது. இளமையின் அடையாளமாக உள்ள அந்த வாசனைதிரவியத்தின் மணத்தைக் கன்னியாஸ்திரிகள் விரும்புகிறார்கள். …

இமயத்தின் மணியோசை. Read More »

மூன்றாம் பதிப்பு

நான் தொகுத்த 100 சிறந்த சிறுகதைகள் நூலின் மூன்றாம் பதிப்பு  வெளியாகியுள்ளது.  இரண்டு  தொகுதிகள் சேர்த்து விலை : ரூ 800 டிஸ்கவரி புக் பேலஸ் இதனை வெளியிட்டுள்ளது நூலை வாங்குவதற்கு அணுகவும் Discovery Book Palace (P)Ltd No.6, Magavir Comlex, 1st Floor Munusamy Salai, K K Nagar West Chennai – 600078 (Near Pondichery Guest house) Ph”+91 44 65157525 , Cell +91 9940446650 Mail: discoverybookpalace@gmail.com

எனக்குப் பிடித்த கதைகள் 35

கார்லோவுக்கு எப்படி வாசிப்பது என்று தெரியாது கியூலியோ மோஸி ஆங்கிலத்தில்: எலிசபெத் ஹாரிஸ் தமிழில்: சுகுமாரன் கார்லோவுக்கு (அது நான்தான்) எப்படி வாசிப்பது என்று தெரியாது. அவன் மாபெரும் புத்தகங்களை வாசிக்கிறான். அந்தப் புத்தகங்களை வாசிக்கும்போது கார்லோவுக்கு ஒரு வார்த்தையும் புரிவதில்லை. அந்தப் புத்தகங்களில் கார்லோ  எதைப் பார்க்கிறானோ  அதையே நினைவில் வைத்துக்கொள்கிறான். கார்லோ வாசிக்கும்போது அடிக்கடி கண்களை  மூடிக் கொள்கிறான். சில சமயங்களில் தூங்கி விடுகிறான். தூங்கும்போது பொருட்களைப் பார்க்கிறான். விழித்தெழுந்ததும்  மறுபடியும்  வாசிப்பைத் தொடர்கிறான். …

எனக்குப் பிடித்த கதைகள் 35 Read More »

செம்மலரில்

செம்மலர் மே இதழில் இடக்கை நாவல் குறித்து கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் விமர்சனம் எழுதியிருக்கிறார். அவருக்கும் செம்மலர் இதழுக்கும் மனம் நிரம்பிய நன்றி ••

இடக்கை நாவல் குறித்து

இடக்கை நாவல் குறித்து புத்தகம் பேசுது மே இதழில் டி.லட்சுமணன் சிறந்த விமர்சனக்கட்டுரையை எழுதியிருக்கிறார். அவருக்கும், புத்தகம் பேசுது  இதழிற்கும் மனம் நிரம்பிய நன்றி