எனது நாவல் யாமம் தெலுங்கில் வெளியாகி உள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் பாலாஜி.
••
சென்னை வீக் எண்ட் கிளிக்கர்ஸ் நடத்தும் புகைப்படக்கண்காட்சி ஆகஸ்ட் 25 முதல் 31 வரை லலித் கலா அகாதமியில் நடைபெற உள்ளது. அதில் ஆகஸ்ட் 25 மாலை 5.30 மணிக்கு புகைப்படநூலை வெளியிடுகிறேன், அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது.
••
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 5 காலை 10.30 மணிக்குத் திருச்சி St. Joseph’s College ல் உரையாற்றுகிறேன்
••
செப்டம்பர் 7 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு அண்ணாநகரில் எழுத்தாளர் தமிழ்மகன் நடத்துகிற பொக்கிஷம் புத்தகக் கடையில் நோபல்பரிசு பெற்ற எழுத்தாளரான நாகிப் மாஃபஸ் எழுதிய அரேபிய இரவுகளும் பகல்களும் நாவல் குறித்து உரையாற்றுகிறேன்.
எதிர்வெளியீடாக வந்துள்ள இந்த நாவலை சா.தேவதாஸ் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
••