இரண்டு லட்சம் பார்வைகள் 


 


 


 


எனது இணையதளம் கடந்த ஆறுமாதங்களில் இரண்டு லட்சம் பார்வைகளை  (Two lakhs Hits எட்டியிருக்கிறது. இதனைச் சாத்தியப்படுத்திய இணைய வாசகர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.என்னுடைய வலைத்தளத்தை  அறிமுகம் செய்தும், தங்களது வலைப்பக்கத்தில் இணைப்புகள் தந்தும் உள்ள வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.


எனது வலைத்தளத்திற்கான தொழில்நுட்ப உதவிகள்  மற்றும் ஆலோசனை செய்து வரும் லீலைராஜன், கோபி மற்றும் ராம்கி ஆகியோருக்கும்  இந்தத் தருணத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


வலைத்தளத்தின் வழியே வெவ்வேறு தேசங்களில் வாழ்ந்து வரும், வாசகர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் என பல புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். கென்யா, ரஷ்யா, ஜப்பான், சைனா, கனடா, இலங்கை, அமெரிக்கா, பாரீஸ், சிங்கப்பூர், மலேசியா, துபாய், மெக்சிகோ என்று விரியும் இதன் பரந்த வாசகத் தளம் எழுதுவதற்கு  நிறைய உற்சாகத்தை அளிக்கிறது.


பல்கலைகழகங்கள், கல்லூரிகள், ஆய்வு மையங்கள், இலக்கிய அமைப்புகள், என்று பலதரப்பட்ட தளங்களில் இந்த வலைத்தளம் தொடர்ந்து வாசிக்கபடுவதுடன் இளம் வாசகனுக்கு மிக நெருக்கமாக உள்ளது என்பது மகிழ்ச்சி தருவதாகயிருக்கிறது.


இந்த வரவேற்பும் ஆதரவும் தொடர்ந்து சீரிய தளங்களில் செயல்படும் அக்கறையையும் முயற்சியையும் உருவாக்கியிருக்கிறது. அதற்காக யாவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். 

0Shares
0