கடந்த சனிக்கிழமை அன்று தியேட்டர் லேப் சார்பாக நண்பர் ஜெயராவ் எனது ஐந்து சிறுகதைகளையும் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் ஐந்து கவிதைகளையும் நாடகமாக நிகழ்த்திக்காட்டினார். அரங்கு நிரம்பிய கூட்டம்.
இந்த நிகழ்விற்குத் தோழர் மகேந்திரன் தலைமை வகித்து உரையாற்றினார். இவை இளம் நடிகர்களுக்கான நடிப்பு பயிற்சிக்காக உருவாக்கபட்டவை. குறைந்த வசதிகளைக் கொண்டு எளிய முறையில் இவை மேடையேற்றப்பட்ட போதும் மூலப்பிரதியை சரியாக உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக நிகழ்த்தபட்டன என்பது சந்தோஷம் அளித்தது
நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் பிரதிகளை நடிகர்களுக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்துவதுடன், அவற்றை நாடகமாக்கி புதியதொரு கலைஅனுபவத்தை உருவாக்குவதில் ஜெயராவ் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார், அவருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்.
ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற ரோமியோ ஜுலியட் நாடகத்தை ஜெயராவ் தனது குழுவினர்களுடன் விரைவில் நிகழ்த்த இருக்கிறார். இதற்கான ஒத்திகை தற்போது நடைபெற்றுவருகிறது.
இந்த நாடகநிகழ்வில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் தியேட்டர் லேப்பைத் தொடர்பு கொள்ளவும்
••••
தியேட்டர்லேப் நடிப்புப் பயிற்சி மையம்
என்-6.மகாவீர் மளிகை, முனுஸ்வாமி சாலை,
டிஸ்கவரி புக் பேலஸ் மாடி
மேற்கு கே கே நகர் . சென்னை 78
தொடர்புக்கு ஜெயராவ்.சேவூரி -9688858882