காரல் மார்க்ஸ் – உரை

நேற்று திருப்பூரில் நடைபெற்ற காரல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் விழாவில் உரையாற்றினேன். மார்க்ஸ் பற்றிப் பேசப்பேச உணர்ச்சிவசம்மீறி என்னை அறியாமலே கண்ணீர் சிந்தும்படியானது. பெரும்பான்மையான உரைகளில் பேச்சை என் கட்டுக்குள் தான் வைத்திருப்பேன். இது போல சில தருணங்கள் பேச்சு இழுத்துக் கொண்டுபோய்விடுகிறது. மார்க்ஸ் பற்றிய உரைக்காக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மார்க்ஸின் வரலாற்றையும் தத்துவங்களையும் வாசித்தது புத்துணர்வு தருவதாகயிருந்தது. இந்நிகழ்வை ஏற்பாடு செய்த தோழர் ஈஸ்வரனுக்கும், தலைமை ஏற்றி நடத்திய தோழர் எஸ். ஏ.பெருமாளுக்கும். திருப்பூர் மாவட்ட முற்போக்கு  எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்திற்கும், சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்த ஸ்ருதி டிவிக்கும் மனம் நிரம்பிய நன்றி
Karl Marx History – S. Ramakrishnan speech | காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு – எஸ்.ராமகிருஷ்ணன் உரை
#KarlMarx
https://www.youtube.com/watch?v=mhqRn7HKpZs

0Shares
0