சுசீலா ராமன்

சுசீலா ராமன்  எனக்கு விருப்பமான பாடகி, அவரது கிறக்கமூட்டும் குரலுக்கு நிகரேயில்லை,  சுசீலாவின் சால்ட் ரெய்ன் இசைத்தொகுப்பு  அற்புதமானது,  தஞ்சாவூரைப் பூர்வீகமாக கொண்ட சுசீலா பிரிட்டனில் பிறந்தவர், அவரது நான்கு வயதில் பெற்றோர் ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்தார்கள், அங்கு மேற்கத்திய இசையும் கர்நாடக சங்கீதமும் கற்றுக் கொண்டவர் சுசீலா ராமன்,  கல்லூரி நாட்களிலே தனக்காக ஒரு இசைக்குழுவை உருவாக்கி கொண்டு கர்நாடக சஙகீதத்தை ஜாஸ் இசையோடு இணைந்து புதியதொரு இசை எழுச்சியை உருவாக்கினார், இன்று உலகப்புகழ்பெற்ற பாடகியாக சுசீலாராமன் விளங்குகிறார்

மரபாகக் கேட்டு வந்த கர்நாடக இசைப்பாடல்களை சுசீலா முற்றிலும் இன்னொரு தளத்திற்கு கொண்டு போய்விடுகிறார், குறிப்பாக அவர் பாடும் வேலுண்டு வினையில்லை பாடலைக் கேட்டுபாருங்கள்,  கொண்டாட்ட மனநிலை பீறிடக்கூடியது,

பக்திபாடல்கள் என்று ஆன்மீக வரையறைக்குள் ஒடுஙகியிருந்த  பல பாடல்களை சுசீலா தனது புதிய பாடும் முறையால் மகத்தான அனுபவமாக மாற்றிவிடுகிறார்,

மஹா கணபதி  பாடலை அவர் பாடும் போது உடல் சிலிர்க்கிறது,  சுசீலா தேர்வு  செய்து பாடும் பல பாடல்கள் நம் நினைவுப்பரப்பில் முற்றிலும் வேறுவிதமாகப் பதிந்து போனவை,  அந்த நினைவுகளில் இருந்து நம்மை விடுவித்து புத்துருவாக்கம் செய்வதே அவரது சிறப்பு,

பாடல்வரிகளை  அவர் அனுபவித்து ரசித்து,  வியந்து வியந்து பாடுகிறார், திருவெம்பாவையும் தியாகராஜ கீர்த்தனைகளையும் இப்படிப் பாடமுடியுமா என்று நம்மை ஆச்சரியம் கொள்ள வைக்கும் தொகுப்பு இவருடையது

கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு வெளியான சுசீலா ராமனின் வேல் என்ற இசைத்தொகுப்பில் உள்ள வேலுண்டு வினையில்லை தான் தற்போது தினசரி நான் கேட்கும் பாடல்

https://grooveshark.com/#!/s/08+Vel+Undu/3wOtXi?src=5

SALT RAIN, LOVE TRAP, MUSIC FOR CROCODILE, 33 1/3. போன்றவை அவரது முக்கிய இசைத்தொகுப்புகள்

***

0Shares
0