பிரண்டலைன் இதழ் சென்னை375 யைக் கொண்டாட சிறப்பிதழ் ஒன்றினை வெளியிட்டுள்ளது. சென்னை நகரின் வரலாற்றை அழகான கறுப்பு வெள்ளை புகைப்படங்களுடன், அறியப்படாத தகவல்களுடன் அற்புதமாகத் தயாரித்திருக்கிறார்கள்.
அசோகமித்ரன், தியோடர் பாஸ்கரன், எஸ்.முத்தையா. டி.எஸ்.சுப்ரமணியன், வி.ஸ்ரீராம் ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதன் அட்டை வடிவமைப்பையும், உள்ளோவியங்களையும் நண்பர் சீனிவாசன் நேர்த்தியாக வரைந்திருக்கிறார்.
சிறப்பிதழ் ஆசிரியர் விஜயசங்கருக்கும்,சிறப்பான ஒவியங்களைத் தந்த சீனிவாசனுக்கும் எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்.
••