என் ப்ரியத்துக்குரிய வானவன் மாதேவி இன்று காலை 11 30 மணிக்கு சேலத்தில் காலமானார் .
தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாகச் சிகிட்சை பெற்று வந்த போதும் பலருக்கும் தன்னம்பிக்கையூட்டும் பெண்ணாக இருந்தவர் வானவன் மாதேவி.
அவரைப் போல நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் அரிய சேவைகளைச் செய்திருக்கிறார்.
தன் உடற்சிரமத்தைப் பொருட்படுத்தாமல் தேடித்தேடி படித்தவர்,
மிகுந்த சமூக அக்கறை கொண்டவர்.
அவரது மறைவு பெருந்துயரமாக மனதை அழுத்துகிறது.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் வல்லபிக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்
••