அன்பிற்குரிய தோழர் எஸ். ஏ.பி எழுதியுள்ள சிறுகுறிப்பு

••

பதின் நாவல் படித்தேன்
……. ……….. ……………

Sap Marx


எஸ்ரா எழுதிய புதியநாவலான பதின் அருமையாக வந்துள்ளது. பதின் என்றால் பத்து.ஒரு பதின் வயதுச்சிறுவனின் வாழ்வு..
அவனது சிறுவயது அனுபவங்கள் சுவைபடப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு சிறு வயது நினைவுகள்மட்டும் மரணம்வரை
மறப்பதில்லை.

இது தனியொருவனின் கதையல்ல.இதில் வரும்
நான் என்ற சொல் என்னைக் குறிக்கவில்லை…நம்மைக்குறிக்கிறது
என்கிறார் எஸ்ரா.
சிறுவயது அனுபவங்கள் வாசிக்கும் நம்மை
நமது பால்யகாலச் சிந்தனைகளை கிளறிவிடுகின்றன.

நண்பன் நந்துவுடன் சேக்காளியாகி செய்யும் சேட்டைகள் நாம் செய்த
சேட்டைகளை எழுப்பி நினைவில் நிற்க வைக்கின்றன.
85 பிரிவுகளாய் காட்சிப் படுத்தியுள்ள கதைகளும் சம்பவங்
களும் சுவாரசியம் நிரம்பியவை.

இவற்றில் பல கதைகள்
குறும்படங்களாய் ஆக்கலாம்.
ஆம்…இது கதைகளின் கதை…….

0Shares
0