அரவான் நாடகம்

டிசம்பர் 30 மாலை புதுவைப் பண்பாட்டு மையத்தில் அரவான் நாடகம் சிறப்பாக அரங்கேறியது.   நண்பர் சுகுமார் சண்முகம் இயக்கி நடித்திருந்தார். அரவான் நாடகத்தைக் காண அரங்கு நிறைய பார்வையாளர்கள் வந்திருந்தார்கள்.

பத்தாண்டுகள் முன்பாக கருணா பிரசாத் இந்த நாடகத்தை தீப்பந்த வெளிச்சத்தில் மாறுபட்ட நிகழ்வாக  உருவாக்கியிருந்தான். அதிலிருந்து மாறுபட்டு  சுகுமார்  மரபுக்கலைகளுடன் இணைத்து இந்த நாடகத்தை புதிய வடிவில் நிகழ்த்தியது   பாராட்டிற்குரியது.

அரங்க அமைப்பு. ஒளி.  உடைகள், இசை பாடல்கள் பொம்மலாட்டம் என அத்தனையும் சிறப்பாக இருந்தன.

நாடக நிகழ்வின் போது பேராசிரியர் ராஜு,  கருணா பிரசாத். இளவேனில்,  பேராசிரியர் ரவீந்திரன் போன்றவர்களை சந்தித்து உரையாடியது சந்தோஷமாக இருந்தது.

0Shares
0