ஐந்து வலைப்பக்கங்கள்


இணைய வலைப்பக்கங்களில் எழுதுகின்றவர்களில் பலர் மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள். உலக சினிமா, புத்தகங்கள், வாழ்க்கை அனுபவம், நகைச்சுவை. கட்டுரைகள், விவாதம் என்று தொடர்ந்து பலரது பதிவுகளை வாசிப்பது முற்றிலும் மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தை தருவதாக உள்ளது.  இணைய எழுத்து தரும் உடனடித்தன்மையும்  உலகம் தழுவிய பங்கேற்பும் முக்கிய மாற்றுஊடகவெளியாக இதை உணரச்செய்கிறது.



சமீபத்தில் நான் வாசித்த மிக சுவாரஸ்யமான வலைப்பக்கங்கள் இவை. 


அடிக்கடி :


பத்திரிக்கையாளர் அந்தணன்  எழுதும் சினிமா தொடர்பான பதிவுகள் வாய்விட்டு சிரிக்க வைக்ககூடியவை. அற்புதமான நகைச்சுவை உணர்வுடன் ஒளிவுமறைவின்றி அவர் எழுதும் பதிவுகள் தனித்துவமானவை.  அவரை பலமுறை சந்தித்துபேசியிருக்கிறேன். ஆனால் இவ்வளவு நகைச்சுவை கொண்டவர் என்பதை நேரில் அறிந்து கொள்ள முடிந்ததில்லை. கேலியும் கிண்டலும், அதன் ஊடாக பீறிடும் உண்மைகளும் இவரது எழுத்தின் தனிச்சிறப்பு.


https://adikkadi.blogspot.com/


கனவுகளின் காதலன் :


காமிக்ஸ் ப்ரியர்களுக்கான சிறப்பான வலைப்பக்கம். மாங்கா காமிக்ஸ் பற்றிய அறிமுகங்கள். கதைச்சுருக்கம் மற்றும் பல்வேறு காமிக்ஸ் ரசிகர்களின் வலைப்பக்கங்களுக்கான இணைப்பு என்று இந்த வலைபக்கம் சிறப்பாக உள்ளது. குறிப்பாக எனக்கு விருப்பமான மாங்கா ஒவியக்கலைஞரான ஜிரா டனாகுச்சி குறித்த பதிவு சிறப்பாக உள்ளது.


https://kanuvukalinkathalan.blogspot.com/search/label/



தனிமையை குடித்தல் :


தனிமையும் மிதமிஞ்சிய போதையும் கவிதைகளும் ஒன்று கலந்த ஆங்கில வலைப்பக்கம். கவித்துவமான பதிவுகள். தனிமைக்குறிப்புகள். கவிதைகள்  காமம், என்று ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது


https://metaphysicaldrinking.blogspot.com/2008_08_01_archive.html


நவீன விருட்சம் :
அழகிய சிங்கர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறுபத்திரிக்கை நடத்தி வருபவர். கவிஞர், சிறுகதை ஆசிரியர். பதிப்பாளர். அலுத்துப் போகுமளவு இலக்கிய கூட்டங்களை தொடர்ந்து நடத்தியும் அதில் உற்சாகம் குறையாதவர். இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மீது மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் கொண்டவர். அவரது விருட்சம் இலக்கிய இதழில் நான் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். அவர் துவங்கியுள்ள வலைப்பக்கமிது. 


 அசோகமித்ரன், பிரமீள், நகுலன், ஆத்மநாம். சம்பத் முத்துசாமி,ஸ்டெல்லா புரூஸ், கோபி கிருஷ்ணன் என்று இந்த வலைப்பதிவில் உள்ள பக்கங்கள் விரிந்த தளத்தில் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்கின்றன. சமகால இலக்கியத்திற்கான இணைய இதழாக வெளியாகும் நவீன விருட்சம் முக்கியமான வலைப்பக்கமாகும்.



https://navinavirutcham.blogspot.com/2009/06/1.html


தமிழ் நெஞ்சம் :


இலவச மென்பொருட்கள், சிறந்த குறும்படங்களுக்கான இணைப்பு, குழந்தைகளுக்கான இணைய உலவிகள், புதிய தொழில்நுட்பம் என்று கணிணி சார்ந்த புதிய வரவுகளை அறிமுகப்படுத்துவதுடன் அவற்றை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளும் இணைப்பை தந்து வரும் சிறந்த வலைப்பக்கம். மொழியாக்கம் செய்யப்பட்ட குறுங்கதைகள், அனுபவம் என்று சுவாரஸ்யமான பதிவுகள் உள்ளன. மிக அவசியமான. சிறப்பான வலைப்பக்கம்


https://www.tamilnenjam.org


••••


 

0Shares
0