நேற்று எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிரம்பிய கூட்டம். நிறைய இளைஞர்கள் வந்திருந்தார்கள். கோவை, சேலம், திருச்சி, மதுரை, தஞ்சை. கும்பகோணம் என பல ஊர்களிலிருந்தும் நிகழ்விற்காக வாசகர்கள் வந்திருந்தது மகிழ்ச்சி அளித்தது.





திருப்புகழ் ஐஏஎஸ் எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலை வெளியிட்டுச் சிறப்பான உரையை நிகழ்த்தினார். ஒரு நாவலை எப்படி வாசிக்க வேண்டும். அதில் எந்தெந்த விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதைப் பற்றி அவரது பார்வைகள் மிக முக்கியமானவை. அபாரமான உரை.

நீதியரசர் பிரபாஸ்ரீதேவன் நிகழ்விற்கு வந்திருந்து நாவலின் பிரதியைப் பெற்றுக் கொண்டு சிறப்பித்தார்.





காந்தி ஸ்டடி சென்டரைச் சேர்ந்த சரவணன் காந்தியின் நிழலில் குறித்த கலந்துரையாடலைச் சிறப்பாக ஒருங்கிணைப்புச் செய்திருந்தார்.

மண்டியிடுங்கள் தந்தையே நாவலை ஆழ்ந்து படித்து அகரமுதல்வன் கலந்துரையாடியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


இந்தோ ரஷ்யன் சேம்பர் செயலாளர் தங்கப்பன்.இந்த நாவல் ரஷ்ய மொழியில் வெளியாவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்

துணை தூதர் ஜினோடி ரகலோவ் நிகழ்வில் நாவலைப் பெற்றுக் கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
பிரெயில் மொழியில் வெளியிடப்பட்ட இந்த நூலை மாணவி நிவேதிதா பெற்றுக் கொண்டு நாவலின் ஒருசில பக்கங்களை மேடையில் வாசித்தார். ஆடிட்டர் சந்திரசேகர் முன்னெடுப்பின் காரணமாகவே இந்த நூல் வெளியானது. அவருக்கு எனது அன்பும் நன்றியும்
புத்தகங்களைச் சிறப்பாக அச்சிட்டு உதவிய மணிகண்டன். நிகழ்விற்குத் துணை நின்ற சண்முகம், அழகர், புத்தக வடிவமைப்பில் உதவிய குரு. பிழைதிருத்தம் செய்து உதவிய ராஜாராம். பாரதி, ஜெபசிங் தேசாந்திரி பதிப்பகத்தின் மேலாளர் அன்புகரன். புத்தக வெளியீட்டிற்காகப் பகலிரவாக உழைத்த அன்பு மகன் ஹரி பிரசாத் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்