தில்லி கருத்தரங்கம்

தில்லித் தமிழ்ச்சங்கம்  சம கால இலக்கிய வளர்ச்சிப் போக்குகளை மதிப்பீடு செய்ய தமிழ் 2010  என்னும்  இலக்கியக் கருத்தரங்கை டிச.10,11,12 ஆகிய நாட்களில் புதுடில்லியில் மிகச்சிறப்பாக நிகழ்த்த திட்டமிட்டுள்ளது.

நான் அதில் கலந்து கொண்டு சிறுகதைகள் பற்றி உரையாற்ற இருக்கிறேன் 11.12.10 அன்றுகாலை பனிரெண்டு மணிக்கு எனது உரை நிகழ்த்தப்பட உள்ளது

இந்த கருத்தரங்கில் நாஞ்சில்நாடன். கவிஞர் சிற்பி , ரவி சுப்பிரமணியன், பத்ரி சேஷாத்திரி , கவிஞர் கலாப்ரியா , பேராசிரியர் ப்ரேம், வெளி ரங்கராஜன், இமையம், அம்பை,  லிங்க்ஸ்மைல் வித்யா ,அமரந்தா ,தியடோர் பாஸ்கரன் , பேராசிரியர் சிவப்பிரகாஷ், உள்ளிட்ட பல முக்கிய எழுத்தாளர்களும், அறிஞர்களும் கலந்து கொள்கிறார்கள்

புது தில்லி முதல்வர் ஷீலாதீக்‌ஷித்,உள்துறைஅமைச்சர் திரு ப.சிதம்பரம்,முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம் ஆகியோரும் இவ் விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க விருக்கிறார்கள்.

டெல்லியில் உள்ள இலக்கிய நண்பர்கள் யாவரும் அவசியம் கலந்து கொள்ளவும்

••

0Shares
0