எனது புதிய நாவலான துயில் வெளியீட்டு விழா புத்தாண்டு தினத்தின் மாலையில் (1.1.11 மாலை 5.30 மணி) நடைபெறுகிறது.
உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது
நாவலின் வெளியீட்டு விழா நான்கு பகுதிகளைக் கொண்டதாக வடிவமைக்கபட்டிருக்கிறது
முதல் பகுதி நாவலின் உள்ளடக்கம் மற்றும் அது எந்த விதமான நாவல் என்பதைப் பற்றிய செறிவான அறிமுக உரை, அதைத் தொடர்ந்து நாவல் வெளியீடு.
இரண்டாம் பகுதியாக துயில் நாவலை முன்வைத்து நாவல் எழுதுவதின் சவால் மற்றும் சூட்சுமங்கள் குறித்து நான் விரிவான உரை நிகழ்த்த இருக்கிறேன்
அதன் அடுத்த பகுதியாக துயில் குறித்து இரண்டு முக்கியச் சிறப்புரைகள் இடம் பெறுகின்றன
நான்காவது பகுதியாக துயில் நாவல் குறித்து ஒரு கலந்துரையாடல் அரங்கு நடைபெறுகிறது, அதில் ஐந்து முக்கியப் படைப்பாளிகள் கலந்து கொண்டு நாவல் குறித்த தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதோடு, சமகால நாவலின் போக்குகள். உலக அளவில் உருவாகி வரும் இலக்கிய மாற்றங்கள் குறித்து விரிவாகப் பேச இருக்கிறார்கள்
துயில் நாவல் 600 பக்கங்களுக்கும் அதிகமானது, புதிய ஆண்டினைப் புதிய நாவல் ஒன்றோடு சந்திப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
என்னோடு இந்த சந்தோஷத்தை நீங்களும் சேர்ந்து கொண்டாட வெளியீட்டு விழாவிற்கு வாருங்கள்
**