என்னம்மா தோழி

காலைப்பனி என்ற படத்தில் சதீஷ ராமலிங்கம் இசையமைத்த என்னம்மா தோழி என்ற பாடலை சில வாரங்களாகவே அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன், கேட்கக் கேட்கப் பரவசமாகவே இருக்கிறது, சமீபமாக நான் கேட்ட மிகச்சிறந்த பாடல் இதுவே,

ராஜேஷ் செல்வா இயக்கிய இந்தப் பட்ம் சென்ற ஆண்டு வெளியானது என்கிறார்கள், நான் அதைப் பார்க்கவில்லை, ஆனால் பாடல்கள் அற்புதமாக இருக்கின்றன.

தற்செயலாக ஒரு நண்பரின் காரில் இந்தப் பாடலை கேட்டதில் இருந்து அதைத்தேடிப்பெற்று கேட்க ஆரம்பித்தேன்,

இந்தப்பாடலை எழுதியிருப்பவர் சசிக்குமார் பாடியிருப்பவர் சுலபா (Sulaba.)

இதே காலைப்பனி படத்தில்  சித்திரம் பேசுதடி பாடலை புதிய இசையில் மனதை வருடும் படியாக உருவாக்கியிருக்கிறார்கள், நிச்சயம் சதீஷ் எதிர்காலத்தில்  ஒரு சிறந்த இசையமைப்பாளராக சாதனை புரிவார் என்று நம்புகிறேன்,

பாடலின் எளிய வரிகளும் குரலும் இசையும் பனி உருகுவதைப்போல மனதை தன்னியல்பாகக் கரைந்து போகச்செய்கிறது.

என்னம்மா தோழி  பொம்மையை  காணோம்
நான் என்ன பண்ண போறேன்
தலை வாரி பின்னி பூக்கள் வைத்து
புது சட்டை போட்டு விட்டேன்.
ஐப்பசி மாதம் ஆறாம்  தேதி  பொம்மையை�
வாங்கி   வந்தேன்.
தாலாட்டு  நான்  பாட   நீ  தூங்க  மாட்டாயோ….

என்னம்மா தோழி  பாட்லைத் தரவிறக்கம் செய்ய

  https://download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Kaalai%20Pani/Ennamma%20Thozhi%20-%20TamilWire.com.mp3

 காணொளி

https://www.youtube.com/watch?v=vheCXmaMX9o

சித்திரம் பேசுதடி பாட்லை தரவிறக்கம் செய்ய

https://www.mediafire.com/?djgwmjf2ejz

 •••

0Shares
0