தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றி, சமூகத்தில் சிறந்து விளங்கும் தமிழர்களைப் பாராட்டும் விதமாகப் “பெரியார் விருது” வழங்கி வருகிறது. திரு கி.வீரமணி அவர்களைத் தலைவராகக் கொண்டு இயங்கிவரும் அமைப்பிது.
இவ்வாண்டிற்கான ’பெரியார் விருது’ எனக்கு அளிக்கப்படுவதாக பெரியார் முத்தமிழ் மன்றம் அறிவித்துள்ளது
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஜனவரி 15 முதல் 17 வரை நடைபெற உள்ள பெரியார் முத்தமிழ் மன்றத்தின் தைப்பொங்கல் விழாவில் நடைபெறும்.
**