பேருரையின் முதல்நாள்

உலக சினிமா பேருரையின் முதல்நாள் நிகழ்விற்கு பெரும்திரளாக மக்கள் வந்திருந்தார்கள், அரங்குநிரம்பி நின்று கொண்டே பலரும் கூட்டம் கேட்டனர், இந்த பேருரை நிகழ்வை இயக்குனர் திரு. பாலுமகேந்திரா அவர்கள் துவக்கி வைத்து  உரையாற்றினார்,

விழாவிற்கு வந்திருந்த இயக்குனர் வசந்தபாலன், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், எழுத்தாளர் இறையன்பு ஐஏஎஸ், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

திரையுலகினை சேர்ந்த முக்கிய இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், கலை இயக்குனர்கள் பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர், நிறைய கல்லூரி மாணவர்களையும், உதவி இயக்குனர்களையும், குறும்பட இயக்குனர்களையும் காண முடிந்தது சந்தோஷம் தருவதாக அமைந்தது

அகிரா குரசேவாவின் திரைப்படங்கள் பற்றி மிக விரிவாக இரண்டு மணி நேர அளவு உரை நிகழ்த்தினேன், அது மனதிற்கு மிகுந்த சந்தோஷம் தருவதாக அமைந்திருந்தது

நாளை பிரான்சின் புதிய அலை திரைப்படங்களை உருவாக்கிய பிரான்சுவா த்ரூபோ பற்றிய உரை,

அவசியம் அனைவரும் கலந்து கொள்ள  அழைக்கிறேன்

**

0Shares
0