இந்த வாரம் படித்தவை


இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நினைவுகுறிப்புகள், விமர்சனங்கள், ஆய்வியல், உலகசினிமா  என்று வெவ்வேறு இணையதளங்களில் வாரம் ஐம்பதுக்கும் குறையாமல் வாசித்து வருகிறேன். சில படைப்புகளை வாசிக்கும்  போது அவசியம் அதை தமிழில் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் தோன்றும், உடனே அதை தரவிறக்கம் செய்து வைத்து கொள்வேன். ஆனால் தொடர்ந்த எழுத்து வேலைகள், பயணங்களில் அந்த ஆசை அப்படியே கரைந்து போய்விடும். அதற்குள் இன்னொன்றை வாசித்திருப்பேன்.


இப்படியாக தொடரும் ஏமாற்றத்திலிருந்து விடுபட நான்  வாசித்தவற்றில் இருந்து எனக்கு பிடித்தமான  சில இணைப்புகள் இவை.  ஆங்கிலத்தில் வாசிப்பது இன்று  பலருக்கும் அடிப்படையான எளிய செயலாகி இருப்பதால் இது பெரிய சிரமமாக இருக்காது என்று எண்ணுகிறேன்.


இணைப்பு 1 :


The Sleeping Woman  : Zakaria Tamer .


சிரியாவின் மிக முக்கிய எழுத்தாளர் ஜகரியா தமேர்.  சமீபத்தில் நான் வாசித்த சிறுகதைகளில் இதுவே மிகச்சிறந்த கதை என்பேன்.  இரண்டு பக்க அளவேயான கதை. ஒரு சிறுகதைக்குள் எவ்வளவு விஷயங்களை சொல்லிவிட முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இது. தமிழில் யாராவது மொழிபெயர்த்து வெளியிட்டால் சந்தோஷம் கொள்வேன்.


https://www.banipal.co.uk/selections/selection.php?workid=149


இணைப்பு 2 :


Beginning and the End of the Novel By Milorad Pavić


போஸ்ட் மார்டன் எழுத்தாளரான மிலார்ட் பாவிக் நாவல் எனும் கதைஎழுத்தை முற்றிலும் புதிய வடிவதளத்திற்கு கொண்டு சென்றவர். இவரது  என்ற நாவல் பின்நவீனத்துவ நாவல் வரிசையில் முதன்மையானது. நாவல் எழுதுவது குறித்த அனுபவத்திலிருந்து உருவான  சிறப்பான கட்டுரை இது.


https://www.khazars.com/en/end-of-novel/


இணைப்பு 3 :


Things I would say to my husband if he would listen – Roberta Velyn


தன் கணவன் தன்னை நடத்துவதை பற்றி ஒரு மனைவி மனதிற்குள் புதைத்து வைத்த காயங்களை பகிர்ந்து கொள்ளும் நல்ல கட்டுரை.


https://www.helium.com/items/868399-testimonies-things-i-would-say-to-my-husband-if-he-would-listen


இணைப்பு 4 :


Salwa Bakr  :  The Rooster`s Egg: A Fable of Ancient Thebes


இது எகிப்தின் நவீன எழுத்தாளரான சல்வா பகீரின் சிறந்த சிறுகதை . இவரது Ancestral Hair என்ற சிறுகதை கடந்த பத்தாண்டுகளில் வெளியான மிக முக்கியமான கதைகளில் ஒன்று.


https://www.wordswithoutborders.org/article.php?lab=TheRoostersEgg


இணைப்பு 5 :


NICCOLÒ AMMANITI : The Zoologist


1998ல் வெளியான இத்தாலிய கதை இது. விலங்கியல் படிப்பதில் ஒரு மாணவன் கொள்ளும் சிக்கல் அவனுக்குள் என்னவிதமான மனப்போக்கை உருவாக்குகிறது என்பதை பற்றியது.


https://ercoleguidi.altervista.org/anthology/zoologo.htm


இணைப்பு 6 :


S. Diwakar :   The photograph


கன்னட எழுத்தாளரான திவாகர் எழுதிய சிறுகதை. பழைய புகைப்படம் ஒன்றினை மையமாக கொண்ட ஒரு பக்க அளவேயான கதையது.  நுட்பமாகவும், செறிவான மொழியிலும் எழுதப்பட்டிருப்பதே இதன் சிறப்பு


https://www.littlemag.com/looking/sdiwakar.html


இணைப்பு 7 :


சீனக்கவிதைகள்.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சீனாவின் செவ்வியல் கவிதைகள் இவை. இன்று வாசிக்கும் போதும் அதன் உயர்ந்த கவித்துவமும், ஆழ்ந்த உணர்ச்சி வெளிப்பாடும் உயர்கவிதைகளுக்கான சான்றுகளாக உள்ளன.


https://www.dpo.uab.edu/~yangzw/lishy1.html#1.8


இணைப்பு 8 :


Khyentse Norbu Interview


நேபாளத்தில் உள்ள மடாலயம் ஒன்றில் பௌத்த மத துறவியாக இருந்த நோர்பு ஒரு பிரெஞ்சு திரைப்படக்குழுவினருக்கு உதவி செய்ய போய் அன்றிலிருந்து திரைப்படங்களின் மீது ஆர்வம் கொண்டு திரைக்கலை பயின்று இன்று உலகின் கவனத்தை பெற்ற இளம் இயக்குனராக உள்ளார். இவரது The Cup  மற்றும் Travellers and Magicians, இரண்டு படங்களுமே பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் பரிசு பெற்றிருக்கின்றன. அவரது நேர்காணல் இது


https://www.filmmakermagazine.com/archives/online_features/wise_men.php



***



 

0Shares
0