வாழ்த்துகள் றஷ்மி

சமகால  ஈழக்கவிதைகளில் தனித்துமிக்க கவிஞர் றஷ்மி . நவீன ஓவியரும், வடிவமைப்பாளருமான இவர் தனது முகநூலில் எழுத்தாளர்களை அற்புமான சித்திரங்களாக வரைந்து வெளியிட்டு வருகிறார். இன்று எனது சித்திரம் ஒன்றை அனுப்பியிருந்தார். சிறப்பாக இருந்தது.

ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு , ஈ தனது பெயரை மறந்து போனது, ஈதேனின் பாம்புகள் என்ற அவரது கவிதைத்தொகுப்புகள் முக்கியமானவை.

றஷ்மியின் கவிதைகள் நீதி மறுக்கபட்ட சாமானிய மனிதனின் குரலை ஒலிக்கின்றன. அரசியல் மற்றும் இயற்கையால் காவு கொள்ளப்பட்ட எளிய மனிதர்களின் வாழ்க்கைத் துயரங்களையே பெரிதும் அவர் கவிதையில் வெளிப்படுத்துகிறார். அந்தக்கவிதைகளை வாசிக்கையில் தீர்க்கமுடியாத துக்கத்தின் வலியை நம்மால் முழுமையாக உணரமுடிகிறது.

நீள்கவிதைகள் எழுதுவது அவரது பாணி.தனக்கான புதிய கவிதைமொழியை முனைந்து அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அது சொற்களை உடைத்து, உருமாற்றிப் பயன்படுத்தும் கவித்துவஉத்வேகம் என்றே சொல்வேன்.

எட்டு வருஷங்களுக்கு முன்பு அவர் சென்னை வந்திருந்த போது சந்தித்திருக்கிறேன்.

எழுத்தாளர்களின் இந்தக் கோட்டுச்சித்திரங்களைத் தனியே ஒரு கண்காட்சியாக வைக்கலாம். அவ்வளவு நேர்த்தியாக வரைந்துள்ளார்.

நன்றியும் வாழ்த்துகளும் றஷ்மி.

••

0Shares
0