மதுரையில்

மதுரை எட்வர்ட் ஹாலில் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. நிகழ்வை  மாவட்ட செயலாளர் சாந்தாராம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். நிறைய இளைஞர்கள் கூட்டம்.  இருக்கைகள் நிரம்பி நிறையப் பேர் நின்று கொண்டேயிருந்தார்கள்.

கவிஞர் ஸ்ரீரசா முன்னிலை வகித்து நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்தார்.

சஞ்சாரம் நாவலைப் பாராட்டி மக்கள் கலைவாணர் நன்மாறன் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் எனது படைப்புகள் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். ந.ஸ்ரீதர் வாழ்த்துரை வழங்கினார், மதுரை ராயப்பன் குழுவினர் முன்னதாக இன்னிசை நிகழ்வினை வழங்கினார்கள். சர்வோதயா இலக்கியப் பண்ணை சார்பில் மரியாதை செய்தார்கள். நண்பர்கள் முத்துகிருஷ்ணன், சோபியா, எழுத்தாளர் கர்ணன், ஆகியோர் வந்து கலந்து கொண்டது மகிழ்ச்சியளித்தது.

ரஷ்ய இலக்கியங்களைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் நான் சிறப்புரை ஆற்றினேன். நண்பர்கள் ,வாசகர்கள் எனப்பலரும் பொன்னடை அணிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள். அண்ணன் டாக்டர் வெங்கடாசலம்  டாக்டர் தனபால்  இருவரும் கலந்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சி.  பத்திரிக்கையாளர்கள், ஊடகங்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு செய்தி வெளியிட்டதற்கு நன்றி

0Shares
0