கறையான்

வங்காளத்தின் சிறந்த நாவலாசிரியரான சீர்ஷேந்து முகோபாத்யாய (Shirshendu Mukhopadhyay) எழுதிய கறையான் நாவலை நேஷனல் புக் டிரஸ்ட் மறுபதிப்பு செய்துள்ளது. தலை சிறந்த இந்திய நாவல்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது கறையான்.

இந்நாவலின் கதாநாயகனே நவீன இந்தியாவின் அடையாளம். அவனது செயல்கள் அதிர்ச்சியளிப்பவை. வாழ்க்கை குறித்த அவனது பார்வைகளும் மதிப்பீடுகளும் துணிச்சலானவை. அவன் எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளே தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கிறது என்கிறான். எண்ணவோட்டங்களாக நீளும் விவரிப்பும், நிராசையும் வேதனையும் கொண்ட அனுபவங்களும் ஒன்று சேர்ந்து கறையான் நாவலை ஆல்பெர் காம்யூவின் அந்நியன் நாவலின் இந்திய வடிவம் போலாக்குகிறது

சீர்ஷேந்து முகோபாத்யாயவின் Dosar, Hirer Angti ஆகிய இரண்டு கதைகளும் ரிதுபர்னோ கோஷால் திரைப்படமாக்கபட்டிருக்கிறது. சீர்ஷேந்து துப்பறியும் கதைகளும் எழுதியிருக்கிறார். அதில் சில திரைப்படமாக்கபட்டுள்ளன.

கறையான்

விலை 170

நேஷனல் புக் டிரஸ்ட்

சென்னை

0Shares
0