புதிய நாவல்

மதுரை புத்தகக் கண்காட்சியில் எனது புதிய நாவல் வெளியாகிறது
ஒரு சிறிய, விடுமுறைக்காலக் காதல் கதை என்பது நாவலின் தலைப்பு.
இது ஒரு காதல் கதை.
கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களுக்குத் தனியழகு இருப்பது போலவே காதல் கதைகளுக்கும் தனி அழகிருக்கிறது.
கோடைவிடுமுறையில் துவங்கி கோடைக்காலம் தோறும் சந்தித்துக் கொள்ளும் இருவரின் காதல் கதை.
உப பாண்டவம் துவங்கி இடக்கை வரையிலான எனது நாவல்கள் யாவும் தீவிரமான கதைக்களத்தைக் கொண்டவை.
நிறையக் கதாபாத்திரங்கள், கிளைக்கதைகள் என விரிபவை.ஆனால் இந்நாவல் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
நேரடியான, எளிய காதல் கதையிது.
ஆகஸ்ட் 30 முதல் மதுரை புத்தகத் திருவிழா துவங்குகிறது.
நாவல் வெளியீடு தேசாந்திரி அரங்கிலே நடைபெறும்.
நாள் ,நேரம் குறித்து விரைவில் தெரியப்படுத்துகிறேன்

**

அட்டை வடிவமைப்பு  : ஹரிபிரசாத்.R

வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம்

0Shares
0