உலகெங்கும் விரியும் தமிழ்
(இந்து தமிழ் திசையில் வெளியானது.) இணையத்தின் வருகையால் தமிழ் இலக்கியம் இன்று உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் வாசிக்கப்படுகிறது. இரண்டாயிரத்திற்குப் பிறகான தமிழ் இலக்கியம் பன்முகத்தன்மை கொண்டது. தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பர்மா, ஹாங்காங், வியட்நாம், ஆப்பிரிக்கா மொரிசீயஸ், பிரான்ஸ் எனச் சர்வதேச அளவில் வாழும் தமிழர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். நோபல் பரிசு, புக்கர் விருது, டப்ளின் விருது …









