கதையில்லாதவன் கதை
மலையாளக் கவிஞர் எம்.என்.பாலூரின் வாழ்க்கை வரலாற்று நூலான கதை இல்லாதவனின் கதையை வாசித்தேன். வியப்பூட்டும் வாழ்க்கை . இந்நூலைச் சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ளது. ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படித் துவங்கி எங்கே சென்று எப்படி நிலை கொள்ளும் என்று யாராலும் கணிக்கவே முடியாது. பாலூரின் வாழ்க்கை அப்படியானதே. ஒரு நாவலுக்கும் சுயசரிதைக்குமான வேறுபாடாக எதை நினைக்கிறீர்கள் என்று கவிஞர் தேவதச்சன் ஒருமுறை என்னிடம் கேட்டார். நாவலில் வரும் கதாபாத்திரங்களின் போக்கினை, விதியை வாசகனால் ஓரளவு ஊகித்து அறிந்துவிட …