admin

நாவல் இலக்கிய முகாம்

கதைகள் பேசுவோம் இலக்கிய அமைப்பின் சார்பில் வருகின்ற ஜுன் 14ம் தேதி (14/06/2014) சனிக்கிழமை, நாவல் குறித்து விவாதிப்பதற்கான முகாம் ஒன்றினை நடத்த இருக்கிறேன். இதில் எழுத்தாளர் பிரபஞ்சன், மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ், ஆகியோர் சிறப்புப் பங்கேற்பாளர்களாகக் கலந்து கொள்கிறார்கள். டிஸ்கவரி புக் பேலஸ் இதனை ஒருங்கிணைப்புச் செய்கிறது. இந்த ஒரு நாள் முகாமில் உலகின் தலைசிறந்த நாவல்கள், தமிழ் நாவலின் சமகாலப் போக்குகள், தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள், ஆகிய மூன்று அமர்வுகள் நடைபெற இருக்கின்றன. இத்துடன் நாவல் எழுத விரும்புகிறவர்களுக்கான …

நாவல் இலக்கிய முகாம் Read More »

சில இணைப்புகள்

எழுத்தாளர் கி. ராஜநாராயணன் கதையை மையமாக கொண்ட படம் Current (1992 Classic Hindi Movie) https://youtu.be/SILuGo-tEPI Gautama Buddha.avi https://youtu.be/G7fKVRfCNyY Dr Babasaheb Ambedkar https://youtu.be/IfgTP5J2FhY Ardh Satya (1983) – Govind Nihlani https://youtu.be/Xh4K0WN3nv0 Piravi (1988) – Malayalam Movie https://youtu.be/6sZ-iyQ733A Thaniyavarthanam https://youtu.be/oQG4QEwtKYE Ponthan Mada https://youtu.be/IvYybu2eyGs Subah (1984) – Jabbar Patel https://youtu.be/dnqu-TPBzAA Sparsh (1980) – Sai Paranjape https://youtu.be/M-YZAjMk6VM DISHA https://youtu.be/jNgM_Ovxnq4 Bangarwadi https://youtu.be/AwTHmmLuM3k Do …

சில இணைப்புகள் Read More »

கலந்துரையாடல்

படி அமைப்பின் சார்பில் வருகின்ற 23ம் தேதி, வெள்ளிகிழமை மாலை 5.30 மணிக்கு எனது நிமித்தம் நாவல் குறித்து ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன். இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர், சென்னை – 600078 நாள் : 23.05.2014 நேரம் : மாலை 5.30 மணி தொடர்புக்கு  : வேடியப்பன். Ph”+91 44 …

கலந்துரையாடல் Read More »

துக்கலின் கதைகள்

பஞ்சாபி இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் கர்த்தார் சிங் துக்கல், (Kartar Singh Duggal ) சாகித்ய அகாதமி பரிசு பெற்ற இவர், இந்தியப்பிரிவினை குறித்து முக்கியமான கதைகளை எழுதியிருக்கிறார்,  சிறந்த நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர் பாலுறவையும் விலக்கிவைக்கபட்ட இச்சைகளையும் பற்றிப் பகிரங்கமாக எழுதினார் என்று துக்கலின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கபட்டன, பத்திற்கும் மேற்பட்ட சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ள இவர் சிறந்த விமர்சகரும் கூட, துக்கல் அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர், பத்மபூஷண் உள்ளிட்ட பல …

துக்கலின் கதைகள் Read More »

பிரெஞ்சு படம்

பிரெஞ்சு இயக்குனர் மிஷேல் ஸ்பினோசாவின் Son épouse என்ற பிரெஞ்சு படம் புதுச்சேரியை மையமாகக் கொண்டது இப்படத்தின் தமிழ்பகுதிகளுக்கான உரையாடலை நான் எழுதியிருக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு படம்  சர்வதேச அளவில் வெளியாகி சிறந்த பாராட்டுதல்களைப் பெற்றதோடு பெர்லின் திரைப்படவிழாவிலும் பங்கெடுத்துள்ளது

கோடையில் ஒரு மழை

ச.ஆறுமுகம் மலைகள் இணைய இதழிலும் பல்வேறு இலக்கிய இதழ்களிலும் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புகளைச் செய்துவருகிறார், ஒய்வு பெற்ற வட்டாட்சியரான ஆறுமுகம் வேலூரில் வசிக்கிறார், உலக இலக்கியத்தின் சமகாலப் படைப்புகளைத் தேடித்தேடி மொழியாக்கம் செய்துவருகிறார், சிறந்த மொழிபெயர்ப்பாளர். இவரது மொழியாக்கத்தில் வெளியான ஹரூகி முரகாமியின் யானை காணாமல் போகிறது சிறுகதைத் தொகுப்பு முக்கியமானது, சமீபத்தில் வெளியான கோடையில் ஒரு மழை மொழியாக்க சிறுகதைகளின் தொகுப்பில் நோபல் பரிசு பெற்ற மோ யான், ஆலின் மன்றோ சிறுகதைகளுடன் ஜேடீ ஸ்மித், மார்க்வெஸ், …

கோடையில் ஒரு மழை Read More »

டெலிபோன் புத்தகம்

Bashō’s Phonebook  என்ற சித்திரக்கவிதை தொகுப்பு ஒன்று மெயிலில் வந்திருந்தது,  அதை உருவாக்கியவர் Travis Macdonald பாஷோவின் ஜப்பானியக் கவிதைகளை எடுத்துக் கொண்டு டெலிபோன் பேடில் எந்த எழுத்திற்கு எந்த எண் கொடுக்கபட்டுள்ளதோ அதைப் போல கவிதையை டெலிபோன் மொழிக்கு உருமாற்றம் செய்திருக்கிறார் 666:555:3: 7:666:66:3 [—] 333:777:666:4:7777: 5:88:6:7:33:3: 444:66 [—] 7777:666:88:66:3: 666:333: 9:2:8:33:777[.] இது ஒரு பாஷோவின் ஜென் கவிதை, எழுத்து வடிவில் உள்ள கவிதையை எண் வடிவில் மாற்றி தருவது ஒரு …

டெலிபோன் புத்தகம் Read More »

சென்னை திரும்பினேன்

கோடை விடுமுறையில் இருந்து இன்று மதியம் சென்னை திரும்பினேன், விடுமுறைப் பயணம் என்ற போதும் ஒய்வெடுக்கவில்லை, தொடர்ந்த சந்திப்புகள், இலக்கியக் கூட்டங்கள் என சுற்றியலைந்து கொண்டிருந்தது மாறுபட்ட அனுபவமாகவே இருந்தது ஊரில் இருக்கிற நாட்களில் ஒருநாளைக்கு அதிகபட்சம் மூன்றோ நான்கோ தொலைபேசி அழைப்புகள் மட்டுமே வந்தன, வாகன நெருக்கடிகள் இல்லை, ஏகாந்தமான காலை நடை, ஆசை தீரக் குளிப்பது, பிடித்தமான சாப்பாடு, அப்புறம் இரண்டு மணி நேரம் படிப்பது யாராவது நண்பர்களைத் தேடிப் போய் சந்திப்பது, மதிய …

சென்னை திரும்பினேன் Read More »

உரை

உரையாடல் என்ற இலக்கிய அமைப்பை மொழிபெயர்ப்பாளர் தேவதாஸ் மற்றும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து ராஜபாளையத்தில் நடத்தி வருகிறார்கள் இந்த அமைப்பு சார்பாக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான  கேப்ரியல் கார்சியா மார்க்கெஸின் வாழ்வும் எழுத்தும் குறித்து  நான் பேசயிருக்கிறேன் நாள் : மே மாதம் 10ம் தேதி சனிக்கிழமை (10.05.14) நேரம்:  மாலை ஐந்து மணி இடம் : வைமா வித்யாலயா பள்ளி.  ஸ்ரீரெங்கபாளையம், இராஜபாளையம் இப்பள்ளி பத்மா மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ளது நண்பர்கள் …

உரை Read More »

எழுத்தாளர் ஷாஜகான்

எழுத்தாளர் ஷாஜகான் எனது விருப்பத்திற்குரிய நண்பர், அவரைக் காண்பதற்காக குடும்பத்துடன் சென்றிருந்தேன், திருமங்கலத்தில் வசிக்கும் அவரை இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன், ஷாஜகான் சிறந்த சிறுகதை எழுத்தாளர்,காட்டாறு என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார், வம்சி பதிப்பக வெளியீடு, நல்ல பேச்சாளர், தீவிர இலக்கிய வாசகர், மாற்றுக் கல்வி குறித்த நூல்களை மொழியாக்கம் செய்து வருபவர்.பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார், ஷாஜகானும் எழுத்தாளர் கந்தர்வனும் ஜோடிகள், இருவரும் பேச ஆரம்பித்தால் சிரித்து உருள வேண்டியிருக்கும், கேலியும் கிண்டலுமாக பேசிக் …

எழுத்தாளர் ஷாஜகான் Read More »