admin

தாவரங்களின் உரையாடல் முதல் காந்தியோடு பேசுவேன் வரை

நூல் அறிமுகம்  : கீரனூர் ஜாகீர்ராஜா கடந்த நூற்றாண்டின் 90-களில் தமிழ்ச்சிறுகதைப் போக்கில் நிகழ்ந்த மாற்றங்களுக்கு கரிசல் எழுத்தாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. கி.ராஜநாராயணனின் கதைசொல்லி மரபிலிருந்து தொடங்கி கு.அழகிரிசாமியின் எதார்த்தவாத எழுத்தும் அதைத் தொட்டுக்கிளைத்த பா.செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, ச.தமிழ்ச்செல்வன், லட்சுமணப் பெருமாள், உதயசங்கர் எழுத்துகளும் அங்கிருந்து உருவாகி தனித்த பாதையில் பயணித்த கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரும் இன்றைக்குப் புதிதாக எழுத வந்துள்ள கருத்தடையான், சபரிநாதன் வரை நாம் ஒரு நீண்ட வரிசையைப் புழங்கிப் பார்த்திருக்கிறோம். …

தாவரங்களின் உரையாடல் முதல் காந்தியோடு பேசுவேன் வரை Read More »

முகாம் நடைபெறும் இடம்

ஜுன் 14 மற்றும் 15 களில் நாவல் இலக்கிய முகாம் நடைபெறும் லைப் சென்டர் என்ற வளாகம் திண்டுக்கல்லில் இருந்து பத்துகிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து நத்தம் செல்லும் பேருந்து ( 1 நம்பர் பேருந்து ) ஏறி இருபது நிமிசப் பயணத்தில் பதனீர்கடை என்ற பஸ் ஸ்டாப்பில் இறங்கவும் பேருந்து வந்த வழியிலே பத்தடிகள்  நடந்து சென்றால், வலது பக்கம் செல்லும் சாலை பிரியும், அதில் இரண்டு நிமிசத் தூரத்தில் உள்ளது லைப் …

முகாம் நடைபெறும் இடம் Read More »

தேர்வு

ஜுன் 14 மற்றும் 15 தேதிகளில் சிறுமலையில் நடைபெற உள்ள நாவல் இலக்கிய முகாமில் விவாதிப்பதற்காக ஐந்து நாவல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.முகாமில் கலந்து கொள்ளும் நண்பர்கள் இவற்றை வாசித்துவந்தால் விவாதிப்பதற்கு உதவியாக இருக்கும். 1.            மிளிர் கல் – இரா. முருகவேள் 2.            6174 – க.சுதாகர் 3.            விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் -சி.மோகன் 4.            ஒநாய்குலச்சின்னம் – ஜியாங் ரோங் 5.            தனிமையின் நூறு ஆண்டுகள் -கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் •••

வாசிப்பு

வாசிப்பு என்று நாம் சொல்லக்கூடிய வார்த்தையின் உண்மையான பொருள் என்ன ? வாசிப்பு என்பது மற்றொருவர் உரையாட, நாம் கேட்டுக் கொண்டிருப்பது. உரையாடக்கூடியவர் அங்கில்லை. ஆனால் அவரது உரையாடலை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடன் அவர் உரையாடிக் கொண்டிருக்கிறார் என்பதுகூட அவர் அறியாத காரியமாக இருக்கும்; அப்போதும் அந்த உரையாடல் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர் இந்த உலகத்தை விட்டு மறைந்து பல நூற்றாண்டுகள் ஆயிருக்கும். அப்போதும் அவர் நம்மைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தைத் தரும் …

வாசிப்பு Read More »

நெடுங்குருதி: காலத்தின் குரல்

– கேசவமணி நாகு என்ற ஒன்பது வயதுச் சிறுவனை மையப்படுத்தி அவனது தலைமுறை கதையைச் சொல்வதன் மூலம் வேம்பலை என்ற கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது நெடுங்குருதி. நாவல் கோடைக் காலம், காற்றடிக் காலம், மழைக் காலம், பனிக் காலம் என்று நான்கு பகுதிகளாக பகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கால மாற்றமும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காட்டுவதன் மூலம் காலத்தையும் நாவலில் ஒரு கதாபாத்திரமாக உலவ விட்டிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். நாவலை வாசிக்கும் கணம் தோறும் …

நெடுங்குருதி: காலத்தின் குரல் Read More »

தமிழிசை மேதை

புதுச்சேரியை சேர்ந்த முனைவர் மு. இளங்கோவன் நான் மதிக்கும் சிறந்த தமிழ் ஆய்வாளர், அவரது கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தமிழிசை மேதை குடந்தை ப.சுந்தரேசனார் குறித்து அவர் அனுப்பியுள்ள மின்னஞ்சல் இது. *** தமிழிசை மீட்புப் போராளியாக இருந்து தமிழகம் முழுவதும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணம் செய்து தமிழிசை பரப்பிய இசைமேதை பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் தமிழிசைப் பணி தமிழுலகம் கொண்டாடப்பட வேண்டிய ஒரு பணியாகும். இந்த இசையறிஞரின் வாழ்க்கையையும், …

தமிழிசை மேதை Read More »

நிமித்தம் விமர்சனக்கூட்டம்

படி அமைப்பின் சார்பில் நிமித்தம் நாவல் குறித்த விமர்சனக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது, சமீபத்தில் காலமான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மற்றும் நேற்று காலமான இலக்கிய வாசகர் அன்புசிவன் இருவருக்குமான மௌன அஞ்சலியைச் செலுத்திக் கூட்டம் துவங்கியது. அன்புசிவன் ஒரு அற்புதமான மனிதர், இலக்கியத்தை மிகவும் நேசித்தவர், அவரைப் பலமுறை சந்தித்து உரையாடியிருக்கிறேன், அவரது இழப்பு மிகுந்த மனத்துயரை ஏற்படுத்தியது நந்தனம் கல்லூரியில் பணியாற்றும் பேராசியர் ராமன் நிமித்தம் குறித்து ஒரு …

நிமித்தம் விமர்சனக்கூட்டம் Read More »

இரண்டு நாள் இலக்கிய முகாம்

கதைகள் பேசுவோம் இலக்கிய அமைப்பின் சார்பில் நாவல் குறித்து விவாதிப்பதற்காக ஒரு நாள் முகாமை நடத்தலாம் என அறிவித்திருந்தேன். நண்பர்கள் பலரும் ஒரு நாள் போதாது என்று விரும்புகின்ற காரணத்தால் அது இரண்டு நாள் இலக்கிய முகாமாக மாற்றப்படுகிறது ஜுன் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்கள் திண்டுக்கல்லை அடுத்த சிறுமலையில் உள்ள தன்னார்வ நிறுவன வளாகம் ஒன்றில் இந்த முகாம் நடைபெற உள்ளது. இம் முகாமை டிஸ்கவரி புக் பேலஸ் ஒருங்கிணைப்பு செய்கிறது இந்த …

இரண்டு நாள் இலக்கிய முகாம் Read More »