பெசோவின் புத்தகம்
தற்செயலாகவே அந்த புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். பத்து பக்கங்கள் படிப்பதற்கு நான் படித்து கொண்டிருப்பது இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான எழுத்து என்பதை உணர முடிந்தது. அப்படி தான் Fernando Pessoa`s The Book of Disquiet புத்தகத்தை கண்டுபிடித்தேன். பெசோவின் எழுத்து தனித்துவமானது. ஒருவகையில் அது காப்காவை போன்றது. வாழ்க்கையும் காப்காவின் வாழ்வையே அதிகம் ஒத்திருக்கிறது. பெசோவின் புத்தகம் அவரது மறைவிற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியிருக்கிறது. தன் வாழ்நாளில் அதிகம் கவனிக்கபடாத கவிஞராக …