அழைப்பிதழ்
மதுரையில் நடைபெற உள்ள எனது புத்தக வெளியீட்டுவிழா அழைப்பிதழ்
மதுரையில் நடைபெற உள்ள எனது புத்தக வெளியீட்டுவிழா அழைப்பிதழ்
காஃப்கா எழுதாத கடிதம் என்ற எனது கட்டுரைகளின் தொகுப்பு ஆகஸ்ட் 30 மாலை ஆறுமணிக்கு மதுரை தமுக்கம் மைதானம் எதிரில் உள்ள நார்த்கேட் ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளது. உயிர்மை பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது. காஃப்கா எழுதாத கடிதம் கட்டுரைத்தொகுப்பில் 28 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. காஃப்கா, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ழான் காக்தூ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஹெர்மென் மெல்வில், தோரோ, ஹெர்மன் ஹெஸ்ஸே, ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க், மிரோஜெக், ரேமண்ட் கார்வர், விளாதிமிர் மெக்ரே ,வியோலெட் லெடுக், செல்மா லாகர்லெவ். …
ஆகஸ்ட் 30 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு மதுரை தமுக்கம் மைதானம் எதிரில் உள்ள நார்த்கேட் ஹோட்டலில் எனது புதிய சிறுகதை தொகுதி வெளியிடப்படவுள்ளது. உயிர்மை பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது. நீரிலும் நடக்கலாம் என்ற இந்தச் சிறுகதைத்தொகுப்பில் பதினைந்து கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. 1. ஆண் மழை 2. கற்பனைச் சேவல் 3. நீரிலும் நடக்கலாம். 4. அவளது வீடு 5. செகாவின் விருந்தாளி 6. தனலட்சுமியின் துப்பாக்கி 7. பதினாறு டயரிகள் 8. எம்பாவாய் 9. ஒரு …
பிரண்டலைன் இதழ் சென்னை375 யைக் கொண்டாட சிறப்பிதழ் ஒன்றினை வெளியிட்டுள்ளது. சென்னை நகரின் வரலாற்றை அழகான கறுப்பு வெள்ளை புகைப்படங்களுடன், அறியப்படாத தகவல்களுடன் அற்புதமாகத் தயாரித்திருக்கிறார்கள். அசோகமித்ரன், தியோடர் பாஸ்கரன், எஸ்.முத்தையா. டி.எஸ்.சுப்ரமணியன், வி.ஸ்ரீராம் ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதன் அட்டை வடிவமைப்பையும், உள்ளோவியங்களையும் நண்பர் சீனிவாசன் நேர்த்தியாக வரைந்திருக்கிறார். சிறப்பிதழ் ஆசிரியர் விஜயசங்கருக்கும்,சிறப்பான ஒவியங்களைத் தந்த சீனிவாசனுக்கும் எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள். ••
எனது நாவல் யாமம் தெலுங்கில் வெளியாகி உள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் பாலாஜி. •• சென்னை வீக் எண்ட் கிளிக்கர்ஸ் நடத்தும் புகைப்படக்கண்காட்சி ஆகஸ்ட் 25 முதல் 31 வரை லலித் கலா அகாதமியில் நடைபெற உள்ளது. அதில் ஆகஸ்ட் 25 மாலை 5.30 மணிக்கு புகைப்படநூலை வெளியிடுகிறேன், அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது. •• ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 5 காலை 10.30 மணிக்குத் திருச்சி St. Joseph’s College ல் …
எனதருமை நண்பரும் நான் சென்னையில் வாழ்வைத் துவங்குவதற்குக் காரணமாக இருந்தவருமான இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் மகன் பாலகைலாசம் ஆகஸ்ட் 15 அன்று காலமானார். உடல்நலக்குறைவின் காரணமாக அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்ற சேதி கேள்விபட்ட நாளில் இருந்தே காண வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தேன், ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அவரது மரணம் என்னை நிலை குலையச்செய்துவிட்டது. அழுதுவீங்கிய கண்களுடன் வீட்டில் முடங்கிக்கிடந்தேன். என்னால் நண்பர்களின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது. சொல்லவும் முடியாமல் மீளவும் முடியாமல் …
மதுரை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு எனது இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 30 சனிக்கிழமை அன்று மாலை மதுரையில் நடைபெற உள்ளது இடம் : நார்த்கேட் ஹோட்டல், மதுரை. (தமுக்கம் மைதானம் எதிரில்) நேரம் : மாலை ஆறுமணி நாள் : 30.08.2014 *** நீரிலும் நடக்கலாம் எனது சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு, பதினாறு சிறுகதைகளை உள்ளடக்கியது •• காஃப்கா எழுதாத கடிதம் காஃப்கா, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ழான் காக்தூ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், …
எனது நிமித்தம் நாவலுக்கு `மாசிலா விஜயா பரிசு` கிடைத்துள்ளது. ரூபாய் பத்தாயிரம் பணமும் பாராட்டு பத்திரமும் இதற்காக அளிக்கபடுகிறது இவ்விருதை உருவாக்கியிருப்பவர் சவுதி அரேபியாவில் பணியாற்றும் டாக்டர் வ. மாசிலாமணி மற்றும் தென்றல் குடும்பத்தினர். இலக்கியம், அறிவியல், சமூகசேவை ஆகிய மூன்று துறையைச் சேர்ந்தவர்களுக்கு இவ்விருது வழங்கபடுகிறது. இந்த ஆண்டு முதல் இவ்விருது உருவாக்கபட்டுள்ளது. •••
பெமினா இதழில் நிமித்தம் பற்றி வெளியான விமர்சனம்
இளம்புகைப்படக்கலைஞர்களுக்காக உலகப்புகழ்பெற்ற ஒவியங்கள் மற்றும் புகைப்படங்கள் குறித்த உரை ஒன்றினை சனிக்கிழமை (26/07/2014) காலை கே.கே.நகரில் உள்ள சாதனா நாலெட்ஜ் பார்க்கில் நிகழ்த்தினேன். இந்த நிகழ்விற்காகத் தமிழகம் முழுவதுமிருந்து 30 புகைப்படக்கலைஞர்கள் வந்திருந்தார்கள். எனது நண்பர்கள் புகைப்படக்கலைஞர் பிரபு காளிதாஸ், விகடன் பொன்காசி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். சிறப்பு விருந்தினராக நண்பர் ஞாநி வருகை தந்தார். மும்பையில் வசிக்கும் புகைப்படக்கலைஞரான ஜெய்சிங் தனது நண்பர்களுடன் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார். ஒரு மணி நேர உரையும் அதைத்தொடர்ந்த …