இலக்கியம்

கண்ணீர்ப் புகை

கவிஞர் ஞானக்கூத்தன் எழுதிய சிறுகதை. கவனம் சிற்றிதழில் வெளியானது. ••• புறப்பட வேண்டிய நேரம் விரைந்து எதிர்நோக்கி வந்துகொண்டிருந்தது. பேருந்தில் சென்றுகொண்டிருப்பதாகவும், இரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருப்பதாகவும், இரயிலிலேயே போய்க்கொண்டிருப்பதாகவும் குடும்பத்தில் ஒவ்வொருவரும் பாவனை கொண்டு இயங்குகிறார்கள். பெண்கள் பட்டுப் புடவைக்கு மாறிவிட்டார்கள். நிலைக் கண்ணாடிக்கு முன் வேலை முடிந்து வெறுமனே அவ்வப்போது எட்டிப் பார்க்கிறார்கள். ஆண்கள் கணுக்கால் சட்டையைப் போர்த்து இடுப்பில் இறுக்கிக்கொண்டுவிட்டார்கள். இன்னும் மூன்று நாட்களுக்குப் பால், தயிர், பத்திரிகை எதுவும் வேண்டாம் என்று சொல்லியாகிவிட்டதா …

கண்ணீர்ப் புகை Read More »

ஞானக்கூத்தன் கவிதைகள்

அம்மாவின் பொய்கள் பெண்ணுடன் சினேகம் கொண்டால் காதறுந்து போகும் என்றாய் தவறுகள் செய்தால் சாமி கண்களைக் குத்தும் என்றாய் தின்பதற் கேதும் கேட்டால் வயிற்றுக்குக் கெடுதல் என்றாய் ஒருமுறை தவிட்டுக்காக வாங்கினேன் உன்னை என்றாய் எத்தனைப் பொய்கள் முன்பு என்னிடம் சொன்னாய் அம்மா அத்தனைப் பொய்கள் முன்பு சொன்ன நீ எதனாலின்று பொய்களை நிறுத்திக் கொண்டாய் தவறு மேல் தவறு செய்யும் ஆற்றல் போய் விட்டதென்றா? எனக்கினி பொய்கள் தேவை இல்லையென் றெண்ணினாயா? அல்லது வயதானோர்க்குத் தகுந்ததாய்ப் …

ஞானக்கூத்தன் கவிதைகள் Read More »

கணையாழி

பழைய கணையாழி இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது எனது முதல் புத்தகமான வெளியில் ஒருவனுக்கு வெளியான விமர்சனம் கண்ணில்பட்டது. என்னை உருவாக்கியதில் கணையாழிக்கு மிக முக்கியப் பங்கிருக்கிறது.  தி.ஜா குறுநாவல் போட்டியில் இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். அசோகமித்ரன் கையெழுத்தில் வந்த தபால் அட்டைகள் என்னிடமிருக்கின்றன.  

கதைகளால் விரியும் இடக்கை

க.வை.பழனிச்சாமி அக்கறையாக வாசிக்காது ஒரு புத்தகம் நம்மோடு உரையாடாது.அப்படியான மனம் ஜனித்த பின்புதான் புத்தகத்தை நெருங்க வேண்டும்.நமது உயிர் சற்றே வாழ்வதற்கு காத்திருக்கும் புதிய உடல் புத்தகம்.அதனால்தான் வாசிப்பு இன்னொரு வாழ்தலாகிறது.நேர்மையானப் படைப்பிற்கே இந்த விளைவுகள் உண்டு.வாசிப்பு ஒரு அற்புத நிகழ்வு. மறைக்கப்பட்ட பிரதேசத்தின் மீது வெளிச்சமாகப் படிகிறது ‘இடக்கை’.வாழ்வின் அடிப்படையான கேள்விகளோடு நகர்கிறது ராமகிருஷ்ணனின் புதிய நாவல். பாத்திரங்கள் குமிழ்களாகத் தோன்றி அதிர்கின்றன. கதையாடலின் முடிவில் உருவம் உடைந்துமீண்டும் நீரோட்டத்தில் கலந்துவிடுகின்றன.மன்னன் ஒளரங்கசீப் முதல் யமுனை …

கதைகளால் விரியும் இடக்கை Read More »

ஃபுயெண்டெஸின் நினைவுகள்

புகழ்பெற்ற மெக்சிக எழுத்தாளரான கார்லோஸ் ஃபுயெண்டெஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான Myself with Others: Selected Essays வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் எப்படி எழுதத் துவங்கினார் என்றொரு கட்டுரையிருக்கிறது.  அக்கட்டுரை அவரது பிறப்பில் துவங்குகிறது. ஃபுயெண்டெஸ்ஸின் அம்மா சினிமா பார்க்கச் சென்றிருந்த போது பிரசவ வலி ஏற்பட்டு பாதி படத்தில் எழுந்து மருத்துவமனைக்குப் போனதைக் கேலியுடன் நினைவுகூறுகிறார். ஃபுயெண்டெஸ்ஸின் தந்தை மெக்சிக அரசின் அயல்நாட்டு தூதுவராகப் பணியாற்றியவர். அமெரிக்காவில் தான் ஃபுயெண்டெஸ்ஸின் பள்ளிப்பருவம் கழிந்தது.  அமெரிக்காவில் …

ஃபுயெண்டெஸின் நினைவுகள் Read More »

வாழ்த்துகள் றஷ்மி

சமகால  ஈழக்கவிதைகளில் தனித்துமிக்க கவிஞர் றஷ்மி . நவீன ஓவியரும், வடிவமைப்பாளருமான இவர் தனது முகநூலில் எழுத்தாளர்களை அற்புமான சித்திரங்களாக வரைந்து வெளியிட்டு வருகிறார். இன்று எனது சித்திரம் ஒன்றை அனுப்பியிருந்தார். சிறப்பாக இருந்தது. ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு , ஈ தனது பெயரை மறந்து போனது, ஈதேனின் பாம்புகள் என்ற அவரது கவிதைத்தொகுப்புகள் முக்கியமானவை. றஷ்மியின் கவிதைகள் நீதி மறுக்கபட்ட சாமானிய மனிதனின் குரலை ஒலிக்கின்றன. அரசியல் மற்றும் இயற்கையால் காவு கொள்ளப்பட்ட எளிய …

வாழ்த்துகள் றஷ்மி Read More »

இடக்கை விமர்சனம்

இடக்கை தாளகதியில் ஒரு வாசிப்பு – பெஷாரா சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் ‘’இடக்கை’’ என்னும் நாவல் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. வாழ்க்கையின் உள்ளோடும் அவலங்களின் சாரம் தொட்டுச் செல்கிறது நாவல். மற்றும் தேடல்தான் நாவலின் மையக் கரு. ஆம், சில கதாபாத்திரங்களின் மனம், கடந்த காலத்தில் நழுவ விட்ட, வாழும் தருணங்கள் தேடி நினைவலைகளில் அலைகின்றது. பிரிந்த குடும்பத்துடன் ஒன்று கூட விழையும் முயற்சிகளாக தேடல். ஞானிகளின் தரிசனத்தில் எதிர்காலத்தைப்பற்றி அறிந்துகொள்ள பயணப்படும் தேடல். கருவூல ரகசியம் …

இடக்கை விமர்சனம் Read More »

இடக்கை – நாவல்

தே. இலட்சுமணன் தமிழகத்தில் முன்னணியில் நிற்கும் எழுத்தாளர்களில் ஒருவரான எஸ். ராமகிருஷ்ணன் அண்மையில் எழுதி வெளியிட்ட நாவல் “இடக்கை”. இந்த நாவல் பற்றிய எனது விமர்சனம் “புத்தகம் பேசுது” ஏப்ரல் இதழில் வெளிவந்துள்ளது. அந்த நாவலில் சமுதாயத்தில் மிகக் கீழ்  ஜாதியாக தள்ளப்பட்டுள்ள “தூமகேது” என்ற பெயர் கொண்ட பாத்திரமும் மன்னன் அவுரங்கசீப்பின் அந்தரங்கப்பணிப் பெண்களில் ஒருத்தியான அஜ்யா என்ற பெயர் கொண்ட அரவாணி  பாத்திரமும் மனதில் நிற்பவைகளாக நாவல் படைக்கப்பட்டுள்ளன, புத்தக அறிமுகத்தில் அஜ்யா பற்றி …

இடக்கை – நாவல் Read More »

நீதி மறுக்கபட்டவர்களின் குரல்

தனது முகநூல் பக்கத்தில் இடக்கை நாவல் குறித்து இயக்குனர் வசந்தபாலன் எழுதியிருக்கிறார். அவருக்கு எனது அன்பும் நன்றியும். ••• குமாரசாமி\ சங்கர்ராமன்\அண்ணாநகர் ரமேஷ்\ சாதிக் பாட்ஷா\ தினகரன் எரிப்பு சம்பவம்\ தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம்\ ராமஜெயம்/ லீலாவதி/ தா.கிருஷ்ணன் இந்தப் பெயர்கள் எல்லாம் நமக்கு உணர்த்தியது என்ன???. நீதி மறுக்கப்பட்டு விட்டது அல்லது நீதி மறைக்கப்பட்டு விட்டது என்பதை தானே. இப்படி நீதி மறுக்கப்பட்டவர்களின் குரல் அல்லது கதைகள் இன்று உலகமெங்கும் ஒலிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.இலங்கையின் …

நீதி மறுக்கபட்டவர்களின் குரல் Read More »

இடக்கை – விமர்சனம்

கவிஞர் கார்த்திகா முகுந்த் சரித்திர காலத்தில் வாழ்ந்தும் சரித்திரங்களில் இடம் பெற்றிராத எளிய மக்களை மையமாகக் கொண்டு வாசிக்கையில் ‘இடக்கை’ ஒரு புதிய வாசிப்பனுபவத்தைத் தருகிறது. சரித்திரங்கள் குறித்த எனது பார்வைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது. இதுவும் ஒரு வகையில் சரித்திரமாகத் தோன்றுகிறது; எழுதப்படாத எளிய மக்களின் சரித்திரம். நாவலில் குறிப்பிட்ட காலத்துக்குப் பின்  பற்பல ஆண்டுகளுக்குப் பிறகும் தங்கள் நிலையில் மாற்றம் இல்லாமல் வாழும் மக்களின் சரித்திரம். சில சமயங்களில் கதை நடைபெறும் காலத்தில் …

இடக்கை – விமர்சனம் Read More »