ஆளுமை

பிலோ இருதயநாத்

இந்தியாவில் உள்ள பல்வேறு ஆதிவாசிகளை, நாடோடிகளை நேரில் சென்று சந்தித்து அவர்கள் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொண்டு அதை தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பிட்டு மிக நுட்பமாக கட்டுரைகள் எழுதியவர்  பிலோ இருதயநாத்.  சென்னை மந்தை வெளியில் உள்ள லாசர் கோவில் தெருவில் வசித்தவர். 1915ல் மைசூரில் பிறந்த இவர் சாந்தோமில் படித்தார். பள்ளி ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகாலம் வேலை செய்திருக்கிறார். இந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றியலைந்தவர் என்பவர் இவரது தனிச்சிறப்பு. பயண நாட்களில் சைக்கிளை மரத்தின் …

பிலோ இருதயநாத் Read More »

ரிச்சர்ட் பெயின்மென

அறிவியலில் உயர் ஆய்வு செய்யும் நண்பர் ஒருவரை தற்செயலாகச் சந்தித்தேன். சேர்ந்து காபி குடிக்க சென்றோம். வழியில் பேசிக் கொண்டிருந்த போது ரிச்சர்டு பெயின்மெனை  (Richard P. Feynman  )எனக்கு பிடிக்கும். அவரை விரும்பி படித்திருக்கிறேன் என்று சொன்னேன். அவரால் நம்ப முடியவில்லை. வியப்புடன் நீங்கள் பெயின்மெனை எப்படிக் கண்டுபிடித்தீர்கள். எழுத்தாளர்களுக்கும் விஞ்ஞானத்திற்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார். நானும் அந்த இடைவெளி அப்படியே தானிருக்கிறது. எனக்கும் பெயின்மேனின் இயற்பியல் …

ரிச்சர்ட் பெயின்மென Read More »

ஆஸ்கார் நாயகன் ரஹ்மான்.

நான் தொலைக்காட்சி பார்ப்பவனில்லை. ஒரு நாளைக்கு பத்து நிமிசடங்கள் பார்ப்பதே அபூர்வம். பல மாதங்கள் ஒரு நாள் கூட தொலைக்காட்சி பார்க்காமலே கழிந்திருக்கிறது.  என் மனஇயல்பிற்கு தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருப்பது ஏனோ ஒத்துவருவதில்லை. யாராவது நண்பர்கள் பார்க்கும்படி சிபாரிசு செய்தால் ஒரு சில நிகழ்ச்சியை பார்ப்பேன். செய்திகள் அல்லது என்டிவி அரசியல் விமர்சனங்களை எப்போதாவது பார்ப்பதுண்டு. அது போல எங்காவது வெளியூர்களில் தங்கும் நாட்களில் இரவெல்லாம் அனிமல் பிளானெட், அல்லது நேஷனல் ஷியாகிரபி பார்த்து கொண்டிருப்பேன். மற்றபடி …

ஆஸ்கார் நாயகன் ரஹ்மான். Read More »

மைக்கேல் கலாசோ

மைக்கேல் கலாசோசமகால உலக சினிமாவின் திரை இசையமைப்பாளர்களில் மைக்கேல் கலாசோ (Michael Galasso )தனித்து அறியப்படும் அற்புதமான கலைஞர்.  இவர் இசையமைத்த இன் தி மூட் பார் லவ் திரைப்படம் சினிமாவில் இசையின் பங்கு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு முன் உதாரணம். வொங் கர் வாயின் இயக்கத்தில் உருவான இந்த படத்தை காட்சியியல் கவிதை என்று சொல்லலாம். ஒளிப்பதிவும் இசையுமே படத்தின் அடித்தளம். மிக மெல்லிய காதல்கதை ஒன்றின் உணர்ச்சி வெளிப்பாடாக அமைந்த ஒளிப்பதிவாலும், …

மைக்கேல் கலாசோ Read More »

ஜீ.வி. ஐயர்

. ஐந்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு காலையில் கன்னட இயக்குனர் ஜீ.வி. ஐயர் தனது புதிய படமாக ராமாயணத்தை இயக்க உள்ளார். அது பற்றி சில நண்பர்களுடன் கலந்து பேச இருக்கிறார். நீங்கள் வர முடியுமா என்று நண்பர் ஒருவர் கேட்டார். ஜீ.வி. ஐயர் இயக்கிய மத்துவாச்சாரியார், ஆதிசங்கரா, விவேகானந்தர், பகவத்கீதை போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். சமஸ்கிருதத்தில் படம் எடுக்க கூடிய ஒரே இந்திய இயக்குனர். நிறைய தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். கன்னட சினிமாவின் பீஷ்மர் என்று கொண்டாடப்படுபவர். …

ஜீ.வி. ஐயர் Read More »

அ. எக்பர்ட் சச்சிதானந்தம்.

நவீன தமிழ் இலக்கியம் என்பது ஆளுமைகளின் உலகம் மட்டுமில்லை. புதுமைபித்தனுக்கும் ஜானகிராமனுக்கும் ஒரு இடம் இருக்கிறது என்றால் ஜானகிராமனே சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்த வல்லம் தாஜ்க்கும் ஒரு இடம் இருக்கவே செய்கிறது. அறியப்பட்ட இலக்கிய ஆளுமைகளை விடவும் அறியப்படாத முக்கியபடைப்பாளிகள் என்று ஐம்பது பேரைச் சுட்டிகாட்ட முடியும். அவர்கள் அதிகம் எழுதியிருக்கவில்லை. ஒரு சிறுகதைத் தொகுப்போ. கவிதைத் தொகுப்போ வெளியிட்டிருக்கிறார்கள். மின்னல் ஒளிர்வு தனியொளியாக மின்னுவதைப் போல தொடர்ந்து தீவிர இலக்கியத் தளங்களில் பங்குபெறாத போதும் …

அ. எக்பர்ட் சச்சிதானந்தம். Read More »

காந்தியின் கடிகாரம்

            காந்தியைப் பற்றி வாசிப்பது எப்போதுமே மனநெருக்கத்தைத் தரக்கூடியது. சில வாரங்களுக்கு முன்பு காந்தியின் கடைசி நாளைப் பற்றிய விரிவான குறிப்புகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது காந்தியின் கடிகாரம் பற்றிய ஒரு குறிப்பை வாசித்தேன், அது  Ingersoll ‘Turnip’ pocket watch, என்ற காந்தி கடிகாரம் குறித்த தேடுதலுக்கு என்னை அழைத்துச் சென்றது. இணையத்திலும் புத்தங்களிலும் தேடி வாசித்த போது காந்தியின் கடிகாரம் ஒரு சிறப்பு அடையாளம் போல மனதில் உருக் …

காந்தியின் கடிகாரம் Read More »

ஹென்றி கார்த்தியே பிரஸான்

          – நூற்றாண்டுவிழா. A photograph is not a painting, a poem, a symphony, a dance. It is not just a pretty picture, not an exercise in contortionist techniques and sheer print quality. It is or should be a significant document, a penetrating statement, which can be described in a very simple …

ஹென்றி கார்த்தியே பிரஸான் Read More »

டென்சிங் – எவரெஸ்டின் தனிமை.

        எல்லா சாதனைகளுக்கு பின்னும் எளிய மனிதர்களின் உதவியும் உழைப்பும் அடையாளம் தெரியாமல் போய்விடுவது போல எவரெஸ்ட் சாதனைக்கு பின்னும் நுற்றுக்கணக்கான ஷெர்பா எனப்படும் நேபாளிகளின் கடும் உழைப்பும் உதவியும் அடையாளம் தெரியாமலே போய்விட்டிருக்கின்றது.எவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் என்று யாவருக்கும் தெரியும். ஆனால் எவரெஸ்ட் என்பது தாமஸ் எவரெஸ்ட் என்ற ஆங்கிலேய நில அளவையாளரின் பெயர் என்பதோ, இந்தியாவின் நிலப்பரப்பை துல்லியமாக அளவிடுவதற்காக முதன் முதலாக நடைபெற்ற நில அளவைபணியை …

டென்சிங் – எவரெஸ்டின் தனிமை. Read More »

நடையால் வென்ற உலகம

இரண்டு வருடங்களுக்கு முன்பாக மதுரையிலிருந்து ஒசூர் சென்று கொண்டிருந்தேன். ரயில் பயணத்தில் என்னோடு வந்த நண்பர் முத்துகிருஷ்ணன் முதன்முதலாக சதீஷ்குமாரைப் பற்றி தெரிவித்தார். முத்துகிருஷ்ணன் சுற்றுச்சூழல் மற்றும் சமகால இந்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து கூர்ந்த அவதானிப்பும் எதிர்வினைகளையும் செய்து வரும் தீவிரமான இளைஞர். இவரது கட்டுரைகள் உயிர்மை, தலித் முரசு, தமிழினி உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அன்றைய பயணத்தில் படித்த புத்தகங்கள், பயணங்களில் கண்டவை, நாட்டார்தெய்வங்கள் என்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். நீங்கள் …

நடையால் வென்ற உலகம Read More »